HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1626 - 1630 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1626 – 1630 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1626 – 1630 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1626. நேரான வுப்பையெல்லாம்
சுரண்டிவாங்கி நேர்ப்புடனே மறுசட்டிதன்னிற்போட்டு
கூரான தீநெருப்பில்
யெரிக்கும்போது குணமுடனே வுப்பெல்லாம் வுருகிக்கட்டும்
பேரான வுப்பதுவும்
வயிரம்போலாம் பெரிதான வயிரமதையெடுத்துக்கொண்டு
சேரான மண்ணான சட்டிதன்னில்
தெளிவுடனே காச்சியல்லோ மூசைக்கேற்றே
விளக்கவுரை :
1627. ஏற்றவே வுப்பதனைமூசையிட்டு
யெழிலான தன்பதத்தி லிறக்கித்தீரு
போற்றவே கருகட்டி சிலைதான்
வார்ப்பாய் புகழான சிலையதுவும் பாய்ந்தபின்பு
சீற்றமுடன் சிலையதுவும்
சாரணிப்பாய் சிறப்புடனே மேனியென்னும் குப்பைமேனி
தேற்றமுடன் சார்பிழிந்து
காய்ச்சி தோய்ப்பாய் தேர்மையுடன் சிலையதுவு மிருகும்பாரே
விளக்கவுரை :

[ads-post]
1628. பாரேதான் சிலையதுவு
மிறுகிக்காட்டும் பாங்கான லிங்கமுடன் துருசுதானும்
சீரேதான் கெந்தியுடன்
தாரந்தானும் சிறப்பான சூதமுட னிடையாய்ச் சேர்த்து
வேரேதான் மூலியது
விராலிதானும் வேகமுடன் தான்பிழிந்துசரக்கைமைந்தா
கூரேதான் மைபோலரைத்துபின்பு
குணமான மருந்தையெல்லாம் சிலையிற்கேற்றே
விளக்கவுரை :
1629. சிலையான வுப்பினுட
கெதையைமைந்தா சீர்பெறவே கவசித்துப் பூசிப்பின்பு
மலையான வோரமதில்
தானேபூர்க்கும் மகத்தான பூநீறு கவசஞ்செய்து  
குலையான சித்தர்முனி
ரிஷிகளில்லாக் கொலுக்கூடவனந்தனிலே புடத்தைப்போடு
விலையான வுப்பதுவும்
சிவந்துமேதான் விண்ணுலகந்தான்மதிக்கு மதீதம்பாரே
விளக்கவுரை :
1630. அதிதமாங் கெதையதனை
யெடுத்துமைந்தா அழகுபெற குகைவீட்டில் பதனம்பண்ணு
துவிதமு னுந்தனுக்கு வறுமைவந்தால்
துடியான கெதையதனை சீவிமைந்தா
நதீதமுடன் செம்பதனில்
நூற்றக்கொன்று நாட்டிவே மாற்று பனிரண்டாகும்
பதியான சித்தரமுனி செய்யும்
வேதை பாருலகில் யார்செய்வார் நம்பிடாதே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments