HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1651 - 1655 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1651 – 1655 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1651 – 1655 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1651. பார்த்தெடுநீ
சாறாயந்தேனுமட்டும் பதமாகயூத்தி யளவாகச்செய்து
சாற்றிலிடு வாயொருகுளிகை
கொடுத்துப்பாரு சதுரத்தில் வசனமுதற்பேதிநிற்கும்
காத்துநல்ல மூலத்திற்
கிறாணிநல்ல கடிதான செறியாமை வாந்திநிற்கும்
போற்றியே தேகத்தை
பார்த்துதாக்கு புகலரிய போகரிஷி புகன்றிட்டாரே
விளக்கவுரை :
1652. புகன்றிட்டா ரின்னமொரு கருமானங்கேள்
புகழான போகரிஷி கீர்த்திமார்க்கம்
தகன்றிட்ட
சீனபதிசென்றுயானும் தாழ்வாக குளிகைகொண்டு பூமிதன்னில்
மகின்றிட்டுயானும்
அங்கேயிறங்கி பார்த்தேன்மனிதருட நிறந்தானு மேகவெள்ளை
பகின்றிட்ட நிறமதுதான்
வெள்ளையாக கண்டேனே பெண்களுட ரூபந்தானே
விளக்கவுரை :

[ads-post]
1653. தானான ரூபமது வெண்மைகண்டேன்
தாக்கான தரணியெல்லாம் சுத்திவந்தேன்
கோனான பெணகளெல்லாம் வானபேதம்
குணக்குறிக ளனேகமதாய்த் தோற்றங்காணும்
வேனான சீனபதிப்பெண்களெல்லாம்
மேன்மையுடன்தானிருக்கக் கண்டேன்யானும்
பானான காரமதுபூமிதன்னால்
பரங்கியர்க ளெல்லோரும் வெள்ளைதானே
விளக்கவுரை :
1654. வெண்மையாம் பெண்களுடன்
போகம்செய்தேன் வேதாந்த தாயினது வருளினாலே
கண்மையாம்
காலாங்கிதனைநினைத்து களிப்புடனே யிந்திரபோகஞ்
செய்தேன்
தண்மையாம் பதினெட்டுத்
தொப்பிக்காரர் தரணியிலவதரித்தார் புகழ்ச்சிமெத்த
உண்மையா மானிடர்கள்
பிறந்தாரப்பா வுற்பனமாம் கோடிவித்தை பெற்றோர்தாமே
விளக்கவுரை :
1655. தாமேதான் சவுக்கார
வழலைசெய்வார் தகைமையுள்ள கண்ணாடிகாய்ச்சுவார்பார்
போமேதான் பூநீரை
சுண்ணாம்பாக்க புத்தியள்ள மாந்தரப்பா சீனதேசம்
காமேதான் மற்றதோர்
தேசமெல்லாம் கருவளையல் பூநீரைக் காய்ச்சுவார்பார்
நாமேதான் போகரிஷி
கண்டமார்க்கம் நாதாக்கள் கைமறைப்பு வெளியிட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments