HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1756 - 1760 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1756 – 1760 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1756 – 1760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1756. பறந்திட்டார்
சீனபதிவிட்டுநீங்கி பாங்குடனே குளிகையது பூண்டுகொண்டு
மறந்திட்ட காலாங்கி
தனைநினைத்து மார்க்கமுடன் இரத்தினகிரி மலைமேற்சென்று
துறந்திட்ட சித்தர்களைக்
காணவென்று துரைராஜர் வீற்றிருக்கும் பக்கல்சென்று
நிரைந்திட்ட முனிவரிடம்
நின்றுபேச நீனிலத்தில் போகரையா ரென்றிட்டாரே
விளக்கவுரை :
1757. என்னவே யடியேனும் தாள்பணிந்தேன் யெழிலான காலாங்கிதனை நினைந்தேன்
சொன்னதோர் சித்தர்கட்கு
விடையுஞ் சொன்னேன் சுடரொளியாங் காலாங்கி
சீஷனென்றேன்
நன்னயமா யெனையழைத்து
குகையிற்சென்று நாதாக்களிருப்பிடமும் காண்பித்தேதான்
பன்னயமாஞ் சித்தர்களின்
மரபுசொல்லி பட்சமுடனெந்தனுக்கு வழிசொன்னாரே
விளக்கவுரை :

[ads-post]
1758. வழியுடனே இரத்தினகிரி
மேலேசென்றேன் வாகுடனே ரத்தினமென்ற கிரியிற்கண்டேன்
அழியாத வாஸ்தான
கோட்டைகண்டேன் அதற்கப்பால் திருமாலின் கோயில்கண்டேன்
குழிபோலக் குகையுடனே
புனலொன்றுண்டு கூரானமச்சமுனி சித்தனுண்டு
வழிபோகக் காண்பதற்குத்
துரையுமில்லை மகத்தான சித்தர்முனி காவல்தானே   
விளக்கவுரை :
1759. தானான காவலிடம் சென்றுபோனேன்
தயவாக யெந்தனையும் கண்டிட்டார்கள்
மானான மச்சமுனி
யெங்கேயென்றேன் மகத்தான சித்தர்களும் கொண்டுசென்றார்
வேனான மச்சமுனி கண்டபோது
வெகுவெகுவா யெந்தனிடமவர்சொன்னாரே
பானான திருமூலர் பாட்டரெங்கே
பார்த்து நெடுநாளாச்சு யென்றிட்டேனே
விளக்கவுரை :
1760. என்றையிலே போகரிஷிசொன்னபோது
யெடுத்துரைத்தார் திருமுகங்க ளனேகமுண்டு
நின்றையிலே சமாதியிடங்
கொண்டுசென்றார் நிலையான ரத்னகிரி மலையோரந்தான்
நன்மைபெற திருமூலர்
பாட்டர்தம்மை நாதாந்த சித்தொளியைக் காணவென்று
தன்மையுட னவர்பாதந்
தொழுதுநின்றேன் ஷணத்திலே சமாதியது வெடிப்புண்டாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments