HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1761 - 1765 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1761 – 1765 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1761 – 1765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1761. ஆச்சப்பா சமாதியது வெடிக்கக்
கண்டேன் அப்பனே திருமூலர் பாட்டர்கண்டேன்
மூச்சப்பா தானடக்கி
பூமிக்குள்ளே மூன்றுயுகந்தானிருந்த சித்துதன்னை
பேச்சப்பா வெகுபேச்சு
பேசுதற்கு பீடமுதல் தலைவாசல் முன்னே நின்றேன்
நீச்சப்பா
வாசனைகளொன்றுமில்லை நிலையான கற்பமுணட காயமாமே
விளக்கவுரை :
1762. காயமது வாசனைகள் கூறப்போமோ
கடும்பச்சை பூரமென்ற வாடைவீசும்
நேயமுள்ள மல்லிகைப்பூ
மணம்போலெங்கும் நெருங்கவே வொட்டாது குகையினுள்ளே
சாயமென்ற தேகமது
குங்குமம்போல் தரிசிக்க மானிடர்க்கு கிட்டுமோசொல்
மாயமென்ற சித்தொருவர் மகிமைசொல்ல
மாளாது வையகத்தில் மாளாதாமே
விளக்கவுரை :

[ads-post]
1763. மாளாத சித்தென்னைக் கண்டபோது
மகிதலத்தி லாரப்பா காணவந்தீர்
சூளாத ஜெனமில்லாச்
சமாதியுள்ளே சூட்சமுடன்வந்தலுவலென்ன வென்றார்
கோளான வார்த்தைகளும்
பேசவேண்டாம் குறிப்புடனே இரண்டொரு வார்த்தைகள்
சொல்லி
தாளான சமாதிதனை மூடிப்போடு
தரணியள்ள சித்தரெல்லாம் வருவார்தாமே
விளக்கவுரை :
1764. வந்தாரே யாமானால்
கேள்விகேட்பார் வளமுடனே யவர்களுக்கு விடைசொல்லவேண்டும்
சிந்தனையை யான்மறந்துபேச
வேண்டும் பேசாட்டா லவர்களுக்கு மனநோயுண்டாம்
பாங்கான மூலவர்க்கங்
கோடியுண்டு பந்துபந்தாய் வருவார்கள் சமாதியண்டை
தொந்தரவு யெனக்கல்லோ
மிகுதியாகும் துரைராஜ சுந்தரனே சமாதிமூடே
விளக்கவுரை :
1765. மூடனென்று சொல்லுகையி லடியேன்தானும் முடிவணங்கி தெண்டனிட்டு கெதியேதென்ன
நாடென்ற பதிதனிலே
வாழுஞ்சித்தர் நாமிருக்கு மிடந்தனையே யறியமாட்டார்
மாடென்ற மனிதரப்பா
முழுமக்கள்தாமு மடையர்களோ கோடான கோடிபேர்கள்
கூடென்ற கூடுவிட்டுப்
பாய்ந்தேனென்று குவலயத்தில் கூக்குரலு மிகவுண்டாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments