HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1776 - 1780 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1776 – 1780 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1776 – 1780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1776. பாரென்ற போதையிலே யானடுங்கி
பட்சமுடன் பாட்டரையான் பரிவுகேட்டேன்
நேரென்ற சேதியெனக்கு
பாட்டரென்றேன் விருப்பம்வைத்து யெந்தனுக்கு ஞானோபித்தார்
சீருடனே யடியேனும்
நடுநடுங்கி சிறப்புடனே வுபதேசம்பெற்றுக்கொண்டு
பேருடனே காலாங்கி
தனைநினைந்து பேரின்பசாகரத்தை யடைந்திட்டேனே
விளக்கவுரை :
1777. அடைந்தபின்பு குளிகையது
பூண்டுகொண்டு அரசனாம்திருசங்கு விடையும்பெற்று
கடந்துமே யயோத்திநகர்
தன்னைவிட்டுக் காலாங்கிநாதருட கிருபையாலே
தொடர்ந்துமே சீனபதிக்
கேகியானும் துப்புரவாய்க் கமலமுனி பக்கல்சென்றேன்
நடந்ததொரு சங்கிரகம்
யானுரைத்தேன் நலமுடனே கமலமுனி மகிழ்ந்திட்டாரே
விளக்கவுரை :

[ads-post]
1778. மகிழவே யடியேனும்
விடைகள்பெற்று மார்க்கமுடன் வெள்ளையென்ற மனிதர்பக்கம்
நெகிழவே போயிருந்து
யாவுஞ்சொன்னேன் நெடிதான கருவிகரணாதியெல்லாம்
மகிழவே முடித்திட்டேன்
தலைகீழாகச் சதாகாலம் வெள்ளையென்ற மனிதருக்கு
புகழவே சீனபதியோர்கள் மெச்ச
புகட்டினேன் வினோதமென்ற வித்தைதானே  
விளக்கவுரை :
1779. தானான வினோதமென்ற
வித்தையப்பா தாரிணியில் செய்தவரும் பார்த்தோரில்லை
கோனான குருவருளால்
குளிகைபூண்டு குவலயங்கள் சுற்றியல்லோ முழுதும்பார்த்தேன்
பானான கற்றவித்தை
வீண்போகாமல் மாறாமல்சதாகால மென்பேர்கூற
வேனான வித்தைகளை
விரும்பியானும் விபரீதமாகவல்லோ விரித்திட்டேனே
விளக்கவுரை :
1780. விரித்துமே சீனபதி
தன்னில்யானும் வெகுகாலம் நானிருந்தேன் மைந்தாகேளு
நெரித்துமே மறுபடியும்
குளிகைபூண்டு நேரானசீனபதிவிட்டுநீங்கி
புரிந்துமே
சத்தியரிச்சந்திரன்தன் பகழான சமாதியிடங்காணவென்று
தெரித்துமே வயோத்திநகர்
வடபாகத்தில் திறமுடன் சமாதிகண்டு புறப்பட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments