HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 2806 - 2810 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 2806 – 2810 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 2806 – 2810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2806. போடவே தான்கலக்கி
யொன்றாய்தானும் பொங்கமுடன் தானரைப்பாய் மெழுகதாக
நீடவே தீயாறி
எடுத்துப்பார்க்க நிலையான தயிலமது என்னசொல்வேன்
கூடவே பச்சையென்ற  பூரந்தானும் குணமான சாம்பிராணி களஞ்சிகூட்டு
தேடவே குங்குமப்பூ
கஸ்தூரிதானும் தெளிவான ரோசனையும் பொடித்துப்போடே
விளக்கவுரை :
2807. பொடியுடனே தான்போட்டு
யாறவைத்து புண்ணியனே முழுகிவரப் பலனைக்கேளு
நெடியுடனே தும்மலரும்
சீதளம்போம் நெடிதான கபமுதலும் காணாதோடும்
கொடிபோன்ற
நேத்திரன்பாலம்போகும் கொடிதான சுயரோகம் அகன்றுபோகும்
துடியான கண்ணிமையில்
ஊறல்போகும் தூக்கமுடன் சோம்பலது வகலும்பாரே
விளக்கவுரை :

[ads-post]
2808. பாரேதான் கண்ணோய்கள் தொண்ணூற்றாரும் பாங்கான யிமைதடிப்பு யுள்ளிபோகும்
நேரேதான்
வாயுவெண்பதுவும்போகும் நெடிதான சேத்துமங்கள் கீழ்நோக்காகும்
கூரேதான் மயக்கமொடு
வாந்திபோகும் குணமாகும் விக்கலொடு பொருமல்போகும்
தேரேதான் பீனசமுமெட்டுபோகும்
தெளிவாகும் கண்ணிரண்டும் தெளிவாந்தாமே
விளக்கவுரை :
2809. தாமான கருமான மின்னமொன்று
சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோமானுக்கொப்பான சூதராசன்
குறிப்பாகத் தானெடுத்து சேர்தானப்பா
நாமான கண்டாகு
சேர்தான்ரெண்டு நலமானதும்பைப்பூச் சாற்றினாலே 
சாமான சாமமொரு ரெண்டதாக
சாங்கமுடன் தானரைப்பாய் சாகுமட்டே   
விளக்கவுரை :
2810. மாட்டான சூதமது
மடிந்துகொல்லும் மாசற்ற வெண்ணெயதுயாகவென்றால்
திட்டமுடன் முமறியினாற்
கழுவிப்போடு திரளான வெண்ணெயது மைபோலாகும்
சட்டமுடன் வெண்ணெய்க்குச்
சப்தமில்லை சாதகமாய் கைதனிலே எடுக்கலாகும்
நட்டமில்லை பத்துக்கு
ஒன்றுதங்கம் நாதாக்கள் முறைப்படியே கூட்டிக்கொள்ளே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments