HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4641 - 4645 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4641 – 4645 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4641 – 4645 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4641. காலாங்கி நாதரென்ற ரிஷியாருக்கு கனமுடைய சீஷவர்க்கம் போகர்தானும்
பாலான கிக்கிந்தா
மலையினுச்சி பாங்குடனே குளிகைகொண்டு சென்றதுந்தான்
மாலான திருவேல ரிஷியார்தம்மை
மார்க்கமுடன் பேசியல்லோ கண்டதுந்தான்
சீலான கிக்கிந்தா
யடிவாரத்தில் சிறப்புடனே ரிஷியாரைக் கண்டார்தானே
விளக்கவுரை :
4642. கண்டாரே அரிச்சந்திர
சித்துதானும் கனமுடனே தன்தனக்கு வுரைத்தசொல்லும்
அண்டாமல் வார்த்தையது
மிகக்கூறாமல் வம்மலைக்கு மறுபடியும் யேகவென்று
சண்டமாருதம்போல முதலைதன்னை
தகமையுடன் தான்கண்டசேதியாவும்
வுண்மையுடன் சுந்தரனார்
மூர்த்தியாரும் வுரைத்தமொழி தப்பாமல் வுறுதிகொண்டே
விளக்கவுரை :

[ads-post]
4643. கொண்டேதான் வார்த்தையது
மிகவும்நண்ணி குறிப்பான பொன்மயிலைக்கண்டதுந்தான்
அண்டமது வாகாய விந்திரன்தான்
அமரர்பதி சமர்க்களத்தில் ரிஷியார்தம்மை
தெண்டனைகள் சாபமது
மிகக்கொடுத்து தேவேந்திர பகவானுமஞ்சலித்து
வண்டணிமார் கோபத்தால்
சாபந்தந்து வண்மையுடன் மயிலாக்கி போவென்றாரே
விளக்கவுரை :
4644. போகவென்றார் தேவேந்திர
பகவான்தானும் பொங்கமுடன் வடிவேலர் வாகனந்தான்
சாகமுடன் சதாகாலம்
வடிவேலர்க்கு சட்டமுடன் பொன்மயிலா இருக்கவென்று
வேகமுடன் தேவேந்திர
பகவான்தானும் எழிலான சாபமது தந்தாரென்றும்
பாகமுடன் சாபமதைத்
தீர்க்கவென்று பட்சமுடன் பொன்மயிலுங்கேட்கலாச்சே
விளக்கவுரை :
4645. கேட்கவே காலாங்கிநாதர்தாமும்
கிருபையுடன் பொன்மயிலின் சாபந்தீர்க்க
நீட்கமுடன் போகர்மேல்
பட்சம்வைத்து நிலையான ரிஷியினது சாபந்தன்னை
வாட்கமுடன் மனோன்மணியாள்
கிருபையாலே வாகுடனே இந்திரபதி சென்றுமல்லோ
தாட்கமுடன் நவரத்ன
பீடந்தன்னில் தார்வேந்தர் இந்திரனார்சபைகண்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments