HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4741 - 4745 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4741 – 4745 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4741 – 4745 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4741. வழியென்று கேட்கையிலே சித்தர்தானும் வண்மையுடன் தானுரைப்பார் போகருக்கு
பழியான ரேணுகையைக் காணுதற்கு
பாருலகில் யாராலும் முடியாதப்பா
குழியான சமாதியிட
கோட்டைதன்னில் கொற்றவனே செல்வதற்கு இடமுமில்லை
வழிகாணவேண்டுமென்றால்
சொல்வோம்யாமும் வண்மையுடன் கண்டல்லோதெரிசிப்பீரே
விளக்கவுரை :
4742. தெரிசிக்க வேண்டுமென்றால்
தெத்துவாசல் தெளியவே யுந்தனுக்கு தோற்றும்பாரு
பரிசனங்கள் காவலுடன்
அங்கிருப்பார் பாங்கான சமாதியிட பக்கந்தன்னில்
சரியுடனே சமாதிமுகந்
தன்னில்நின்று சட்டமுடன் வுச்சாடஞ் செய்வீராகில்
அரிவையாம் ரேணுகையின்
சரீரவாக்கு வப்பனே யுந்தனுக்கு கேட்கும்பாரே
விளக்கவுரை :

[ads-post]
4743. கேட்குமே யுந்தனுக்கு
யசரீரியப்பா கிருபையுள்ள ரேணுகையின் வார்த்தைதானும்
நீட்கமுடன் சமாதிதனில்
வார்த்தைதோன்றும் நெடிதான சப்தமதைக் காணலாகும்
வேட்கையுடன் குருக்கள்மார்
சித்தர்தாமும் விருப்பமுடன் அசரீரிகேட்ட பின்பு
ஆட்கொள்ள வேண்டுமென்று
போகர்தம்மை வன்புடனே வரங்கேட்க சொல்லிட்டாரே
விளக்கவுரை :
4744. சொல்லவே காலாங்கிநாதர்தம்மை
சுத்தமுடன் போகர்முனி தாள்பணிந்து
வெல்லவே என்சாமி எந்தன்நாதா
வேதாந்தத்தாயாரும் ரேணுமாது
புல்லவே காயாதி கற்பங்கொண்டு
புகழான சித்தர்களை முடக்கஞ்செய்து
கொல்லவே ஜெபதபங்கள்
கெடுத்தமாது கொம்பனையாள் சமாதியிடஞ் சென்றேன்தானே
விளக்கவுரை :
4745. சென்றேனே சமாதியிடஞ்
சென்றேன்சாமி சிறப்பான ரேணுகையின் பக்கல்தன்னில்
நின்றதொரு எந்தன்மேல்
பட்சம்வைத்து நீதியுடன் வாமருள்கவென்றுமேதான்
குன்றான கொம்பனையாள்
மாதுதானும் குறையாமல் யென்மீதில் பட்சம்நல்க
வென்றிடவே மனங்கறைய
ரேணுகைக்கு வேகமுடன் ஆசீர்மஞ் செய்வீர்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments