HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4746 - 4750 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4746 – 4750 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4746 – 4750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4746. தானான போகரிஷிமுனிவர்தானும்
தண்மையுள்ள ரேணுகையைக் காண்பதற்கு
மானான மகதேவர் கிருபையாலே
மகத்தான ரேணுகையின் சமாதிபக்கல்
கோனான குருபரனார்
காலாங்கிதம்மை கொற்றவனார் போகரிஷிதாம்நினைந்து
தேனான தேசோவின் மயத்தினாலே
தேர்வேந்தன் ரேணுகையை நினைத்திட்டாரே
விளக்கவுரை :
4747. நினைக்கையிலே ரேணுகையாம்
வார்த்தைசொல்வாள் நீதியுடன் போகரிஷிமுனிவருக்கு
பனைப்புடனே சீனபதிவிட்டுவந்த
பாலகனேபோகரிஷிநாதாகேளும்
வானைப்பயனை விட்டகற்றி
யெந்தநாளும் விண்ணுலகில் கீர்த்தியது பெறுவதற்கு
முனைப்புடனே மூதுலகில்
வாழ்கவென்று மொழிந்திட்டாள் ரேணுகையும் மொழிந்திட்டாளே
விளக்கவுரை :

[ads-post]
4748. மொழியவே ரேணுகையாள்
மாதுதானும் முனையான போகரிஷிநாதருக்கு
அழிவிலாக் காயாதிகற்பங்கொண்ட
வன்பான காலாங்கி சீஷபாதா
ஒழிவான காயமதை நிலைநிறுத்தி
புற்பனமாய்க் கற்பமது கொண்டபாதா
வழியோடே யெனைக்காண வந்ததாலே வரமுனக்கு
யான்தருவேன் என்றிட்டாளே
விளக்கவுரை :
4749. இட்டாளே ரேணுகையாள் மாதுதானும் எழிலான போகரிஷிநாதருக்கு
அட்டதிசை சுத்திவந்த
அரங்கநாதா வன்பான பாலகனே யுந்தனுக்கு
வட்டமுடன் நாலுவதிசயங்கள்
வன்மையுடன் நானுரைப்பேன் அருண்மைந்தாகேள்
திட்டமுடன் வெகுகோடி
காலமப்பா தீர்க்கமுடன் காயாதி கொண்டேன்பாரே
விளக்கவுரை :
4750. கொண்டேனே காயாதி
கற்பங்கொண்டு குவலயத்தில் சித்துமகா புருஷர்தம்மை
கண்டல்லோ வலைக்கழித்த
மாயாசித்து கனமான ரேணுகையாள் மாதுதானும்
கொண்டல்வண்ணன் மாயாதி
கிருஷ்ணாகாரன் குவலயத்தில் என்வலையில் சிக்கினாரே
தண்டவள ரிஷிகளெல்லாம்
மயக்கிவிட்டேன் தாரணியில் பூபாலா யென்றிட்டாலே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments