HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4791 - 4795 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4791 – 4795 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4791 – 4795 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4791. தந்தாரே போகரிஷிநாதருக்கு
சாங்கமுடன் காலாங்கிநாதர்தாமும்
விந்தையுடன் விடையதுவும்
பெற்றுக்கொண்டு வேதாந்த போகரிஷி
என்றேனே யடியேனும் மனதுவந்து
எழிலாகக் குளிகையது பூண்டுகொண்டு
சென்றேனே சீனபதி
தேசந்தன்னில் சிறப்புடனே வதிசயங்களெல்லாஞ் சொன்னேன்
குன்றான நாகமலைத் தன்னைக்காண
கொற்றவனே மனதுவந்து குளிகைபூண்டு
சென்றேனே வாகாஷந்தான்பறந்து
செம்மலுடன் வுச்சிமுகங் கண்டிட்டேனே
விளக்கவுரை :
4792. கண்டேனே நாகமலைத் தன்னிலப்பா
கருவான புலிப்பாணி மைந்தாபாரு 
உண்டான வுச்சிமுகந்
தன்னிற்சென்றேன் வுதகமுண்டு சுனையுண்டு வதிசயந்தான்
அண்டர்முனி தாமறியா
பாதாளந்தான் வதின்கீழே சமாதியது காவலுண்டு
திண்டான பட்சியது கழுகுவப்பா
திரள்கோடி வரைகோடி சொல்லொண்ணாதே
விளக்கவுரை :

[ads-post]
4793. ஒண்ணாது பட்சியது
யானுங்கண்டேன் வுத்தமனே பட்சியெனைக் கண்டபோது
அண்ணாந்து அடியேனும்
மனதுவந்து அன்புடனே காலாங்கி சீஷனென்றேன்
கண்ணான காலாங்கி சீஷனென்று
கைதொழுது முடிவணங்கி தெண்டனிட்டேன்
மண்ணதனில் சுனைகீழே
இருக்குஞ்சமாதி மார்க்கமுடன் எந்தனுக்குக் கூறலாச்சே
விளக்கவுரை :
4794. கூறவென்றால் மூன்றுயுகங்
கடந்தசித்து குறிப்பான கிரேதாயினுகத்திலப்பா
மாறலுடன் காயாதி
கற்பங்கொண்டு மானிலத்தில் வெகுகால மிருந்தசித்து
சீறலது வாறாது
கழுக்குன்றிசித்து சிறப்பான யோகியல்லோ தவசியாரும்
ஆறலது பூண்டதொரு கொடியசித்து
வப்பனே கிரேதாயின் சித்துதாமே
விளக்கவுரை :
4795. சித்தான தேவசித்து மானிடசித்து
சிறப்பான பிரளயங்கள் கடந்தசித்து
முத்தான
கிரேதாயினுகத்திலப்பா முனையான நாகமலை பரளயத்தில்
சத்தசாகரம் பொங்கியே
மேலெழும்பி சட்டமுடன் மலையதுவும் முழுகிப்போச்சு
வித்தகனார் மலைபோலே
இருந்தசித்து விடுபட்டு மடியாமல் இருந்திட்டாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments