HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4811 - 4815 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4811 – 4815 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4811 – 4815 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4811. பணிந்ததொரு எந்தனையும்
யாரென்றேதான் பட்சமுடன் சதாசிவ ரிஷியார்தாமும்
கணிதமுடன் கருத்துவந்து
கனிந்துகேட்க கைலாசகாலாங்கி நாதர்தம்மின்
அணிகடவுள் விசுவாசபாதம்
பெற்றவப்பனே போகநாதா சீஷனென்றேன்
மணியான குளிகைகொண்டு
மலையிற்சென்று மகதேவா வந்துநெடுநாளுமாச்சே
விளக்கவுரை :
4812. ஆச்சப்பா
வந்துநெடுங்காலமாச்சு வப்பனே தாள்பணிந்து வணங்கிநின்றேன்
மூச்சடங்கி மலைதனிலே
இருந்தசித்து முசியாமல் எந்தன்மேல் பட்சம்வைத்து
பாச்சலுடன் மலைதனிலே
குளிகைகொண்டு பாலகனே வந்ததொரு புண்ணியத்தால்
மாச்சலுடன் வசுரர்கள்
கூட்டந்தன்னில் மன்னவனே வந்ததொரு புண்ணியந்தானே
விளக்கவுரை :

[ads-post]
4813. தானான விட்டகுறை இருந்ததாலே
தண்மையுடன் மலைகளிலே வந்தீரப்பா
தோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் செய்ததொரு தவப்பலன்தான்
மானான வசுராக்கள்
கூட்டந்தன்னில் மன்னவனே தான்கடந்து வந்தீரப்பா 
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே செம்மலுடன் சபியாமல் இருந்திட்டாரே
விளக்கவுரை :
4814. இருந்தாரே யுந்தனது
புண்ணியந்தான் எழிலான வசுராக்கள் கூட்டத்தார்கள்
பொருந்தவே வெகுகோடி
மாண்பரப்பா பொங்கமுடன் மலைதனிலே வந்தாருண்டு
திருந்தவே யசுராக்கள்
கூட்டத்தார்கள் சீறலுடன் சபித்தவர்கள் கோடியுண்டு
வருந்தியே யுந்தனையும்
வணக்கம்செய்து மன்னவனே கொண்டணைத்தார்
புண்ணியமாச்சே
விளக்கவுரை :
4815. ஆச்சப்பா முன்செய்த
புண்ணியத்தால் வப்பனே எந்தனையுங் காணலாச்சு
பாச்சலுடன் காலாங்கி
புண்ணியத்தால் பட்சமுடன் மலைதனிலே வந்தீரப்பா
மாச்சலது வாராமல் உந்தனுக்கு
மன்னவனே உபதேசம் செய்வேனென்று
வீச்சலுடன் ஞானோபதேசந்தன்னை
விருப்பமுடன் எந்தனுக்கு ஓதினாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments