HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4816 - 4820 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4816 – 4820 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4816 – 4820 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4816. ஓதவே சதாசிவ ரிஷியார்தாமும்
வுத்தமனார் எந்தனுக்குக் கூறும்வண்ணம்
நீதமுடன் காலாங்கி சீஷபாதா
நீதியுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
தீதமுடன்
திரேதாயினுகத்திலப்பா திக்கெல்லாம் பிரளயங்கள் கண்டபோது
தோதமுடன் அடியேனும்
தவமிருந்து துப்புறவாய் சமாதிநிலை நின்றிட்டேனே
விளக்கவுரை :
4817. நின்றேனே சமாதிநிலைத் தானிருந்து நீடூழிகாலம் வரைப்பிரளயத்தில்
குன்றேறி மலைமீதில்
நானிருந்தேன் குவலயங்கள் எல்லாமழிந்து குண்ணுமாகி
சென்றவர்கள் மாண்பரல்லோ
கோடாகோடி சேனதிரள் கூட்டமது மலையிற்றிறங்கி
வென்றிடவே தவயோக
நிலையில்நின்று விருப்பமுடன் எந்தனுக்கு சீஷராச்சே
விளக்கவுரை :

[ads-post]
4818. ஆச்சப்பா சீஷர்களோ
கோடிமாண்பர் வப்பனே எந்தனிட சமாதிபக்கல்
மூச்சடங்கி சென்றிருந்தேன்
வெகுகாலந்தான் முனையான சீஷரெல்லாம் பூசைகொண்டு
பாச்சலுடன் பிரளயங்கள் வடியுமட்டும்
பண்பாக எந்தனிடம் பாதுகார்த்து
வீச்சலுடன் எந்தனுக்கு
சோடசாரம் வினயங்கள் செய்துகொண்டாடினாரே
விளக்கவுரை :
4819. ஆடியதோர் சீஷவர்க்க
மாண்பருக்கு வப்பனே யானுமல்லோ வுபதேசங்கள்
நாடியே சின்மயத்தை
கண்டாராய்ந்து சிறப்புடனே ஞானோபதேசஞ்செய்தேன்யானும்
கூடியதோர் ஞானோபம்
பெற்றுமல்லோ குவலயத்தில் நெடுங்கால மிருந்தார்மாண்பர்
வாடியே திரியாமல் உந்தமக்கு
வளமையுடன் உபதேசம் கூறுவேனே
விளக்கவுரை :
4820. கூறுவேன் திரேதாயி
னுகத்திலப்பா கொற்றவனே அயோத்திநகர் தனிலிருந்து
மாறுபடா சமுசாரி ஞானவானாய்
மார்க்கமுடன் நெடுங்கால மங்கிருந்து
ஆறுதலாந்தான் கடந்து
சித்தரோடே யப்பனே யவர்தமக்குத் தொண்டுசெய்து
வீறுடனே காயாதி கற்பங்கொண்டு
விருப்பமுடன் அவர்களிடங் கார்த்தேன்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments