HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4831 - 4835 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4831 – 4835 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4831 – 4835 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4831. சென்றேனே யுகந்தோறுஞ்
சமாதிமார்க்கம் சிற்பரனை மனதிலுன்னி தெளிந்தேன்யானும்
குன்றான பருவத்தில்
கோடியாகம் கொற்றவனே யான்செய்தேன் லக்கோயில்லை
வென்றிடவே நாலுயுகம்
இப்படியேசென்று விண்ணுலக வதிசயங்கள் யாவும்பார்த்தேன்
இன்றுமுதல் வையகத்தி
லதிசயங்கள் எழிலாக மெத்தவுண்டு சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
4832. ஒண்ணாது காலாங்கி நாதசீஷா
ஓகோகோ நாதாக்கள் யாருங்காணா
திண்ணமுடன் நாலுயுகம்
நானிருந்து தீர்க்கமுடன் கண்டவதிசயங்கள்கோடி
பண்ணவெனக் கும்மையல்லால்
யார்க்குரைப்பேன் பாலகனே பண்பாய்க்கேளிர்
நண்ணமுடன் நம்மலையைத்
தேடியல்லோ நலமுடனே வந்ததினால் பலனுண்டாச்சே
விளக்கவுரை :

[ads-post]
4833. ஆச்சப்பா காலாங்கி நாதசீஷா வன்பான போகரிஷி மணியேகேளு
மூச்சடங்கி
நெடுங்காலமிருந்தசித்து மூதுலகில் கோடியுண்டு லக்கொண்ணாது
எச்சலது வாராமல் உம்மைப்போல
எழிலான சித்தர்களுங் கோடியுண்டே
மாச்சலுடன்
மலைவந்ததுண்டோசொல்லு மகத்தான போகரிஷி யென்றிட்டாரே
விளக்கவுரை :
4834. என்றுமே போகரிஷி
குளிகைபூண்டு எழிலான மலைதனிலே வந்தீரப்பா
குன்றின்மேல் எந்தனையும்
ஒருவருந்தான் கொற்றவனே கண்டதில்லை என்பார்தானே
சென்றுமே எழுகடலுஞ்
சுற்றிவந்து செம்மலுடன் எந்தனையும் கண்டீரப்பா
நன்றாக வுந்தனது உபதேசங்கள்
நலமுடனே ஓதிவைப்பேன் என்பார்பாரே
விளக்கவுரை :
4835. பாரேதான் லோகமதில்
அனேகசித்து பான்மையுடன் நெடுங்காலமிருந்தாரப்பா
நீரேதான் அவர்களிட
சாபந்தன்னை நீடாழி யுலகமதில் இருந்தவாறு
நேரேதான் முன்செய்த
பாக்கியந்தான்நிட்சயமாய் இந்நாள்மட்டுமிருந்தீரப்பா
கூரேதான் உம்மைப்போல்
சித்துமுண்டோ குவலயத்தில் விட்டகுறை யிருந்தசித்தே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments