HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4876 - 4880 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4876 – 4880 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4876 – 4880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4876. கொள்ளவே சதுர்முகனார்
சமாதிபக்கல் கொற்றவனே எந்தனையுங் கொண்டுசென்று
விள்ளவே
கிரேதாயினுகத்திலப்பா விருப்பமுடன் சமாதிமுகம் இறங்கியல்லோ
உள்ளபடி நெடுங்கால மிருந்தசித்து
ஓகோகோ நாதாக்களறிந்ததில்லை
கள்ளமன மில்லாத காயசித்து
கடுஞ்சித்து சதுர்முக சித்துமாமே
விளக்கவுரை :
4877. சித்தான சதுர்முக
பிர்மாதன்னை சிறப்புடனே யடியேனுங் காணவென்று
முத்தான கிரிதனிலே
நெடுங்காலந்தான் மூர்க்கமது வாராமல் நானிருந்தேன்
பத்தியுடன் சமாதிபுரம்
நிற்கும்போது பாங்கான வசரீரி வாக்குண்டாச்சு
சத்தியவான் சதுர்முக
பிர்மாவின்தன் சதுரான வார்த்தைதனைக் கேட்டேன்பாரே
விளக்கவுரை :

[ads-post]
4878. பாரேதான் சதாசிவனார்
ரிஷிகள்தம்மின் பாங்கான காலாங்கி சீஷனென்றேன்
சீரோடு எந்தன்மேல் மனதுவந்து
சிறப்புடனே எந்தனுக்குக் காயகற்பம்
தீரேதான் கிரிதனிலே
இருக்கும்தானம் தீர்க்கமுடன் எந்தனுக்கு ஓதினார்கள்
ஆரோதான் சொன்னார்போல்
அசரீரிவாக்கு வப்பனே மலைமீதிற் கேட்கலாச்சே
விளக்கவுரை :
4879. கேட்டவுடன் அடியேனும்
மனதுவந்து கெவனமுடன் காயாதிகற்பந்தன்னை
தாட்டிகமாயுண்டுமல்லோ
மகிமைபூண்டு தாரணியில் மேல்வரைசெல்லுதற்கு
வாட்டமுடன் எந்தனுக்கு
நேத்திரங்கள் வளமுடனே ஜோதிமின்னல் கண்டாற்போல
நீட்டமுடன் பிரகாச
வொளியுண்டாச்சு நீதியுடன் பதினோராங்கால் சென்றேனே
விளக்கவுரை :
4880. சென்றேனே இமயகிரி
பர்வதத்தில் சிறப்பான பதினோராம் வரையிற்சென்றேன்  
குன்றான மலையேறிக்
குளிகைகொண்டு கொற்றவனே பதினோராம் வரையிற்சென்றேன்
வென்றிடவே யன்னமென்ற
பட்சிதன்னை வீரான குகைதனிலே கண்டேன்யானும்
வென்றிடவே எந்தனையும்
எண்ணங்கொண்டு கொற்றவனே யருகதனிற் செல்லலலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments