HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4881 - 4885 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4881 – 4885 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4881 – 4885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4881. செல்லவே எந்தனையுங் கண்டபோது சீறியே சினமதுவும் மிகவுமாகி
புல்லவே யன்னமது
எந்தனைத்தான் புகழுடனே யாரென்று வினவிக்கேட்க
நல்லதொரு வன்னத்தை
யானுங்கண்டு நயமுடனே காலாங்கி சீஷனென்றேன்
வல்லதொரு வன்னமது எந்தனுக்கு
வாகுடனே எந்தன்மேல் இரங்கலாச்சே
விளக்கவுரை :
4882. இரங்கியே எந்தனையுங்
கொண்டனைத்து யெழிலாக எந்தனுக்கு வினயஞ்சொல்லி
கரங்கொடுத்து எந்தனையும்
ஆசீர்மித்து கைலாசபட்சியல்லோ அன்னமப்பா
சாங்கமதுக் குள்ளிருக்கும்
ரிஷியார்தாமும் சுந்தரனே ஜம்புமகாரிஷியாருக்கு
வரங்கொடுத்த பிரகார
மவருக்கல்லோ மன்னவனே பணிவிடைக்கு ஆளானேனே
விளக்கவுரை :

[ads-post]
4883. ஆளாகி தேவேந்திரன் சாபத்தாலே
யன்னமென்ற பட்சியது வுருவமாகி
நாளாகி நெடுங்காலம்
நானிருந்து நாயகனே சாபமது நிவர்த்திசெய்து
மாளாத வரம்பெற்று யானுமல்லோ
மகத்தான ரிஷிகளிடம் விடையும்பெற்று
தூளான பதாம்புயத்தை
யான்வணங்கித் துப்புரவாய்ச் செல்வதற்கு நாளுமாச்சே
விளக்கவுரை :
4884. ஆச்சப்பா போகரிஷிநாதாகேளு
வப்பனே யுந்தனுக்கு உபதேசங்கள் 
மாச்சலுடன் செய்யுகிறேன்
உந்தமக்கு மகத்தான ஜம்புமகா ரிஷியுன்பக்கல்
பாச்சலுடன் கொடுபோயி
விடுவேனென்று பகர்ந்திடவே யன்னமது யெந்தனுக்கு
ஆச்சரிய மாகவல்லோ தானுரைக்க
வப்பனே குகைதனிலே சென்றேன்பாரே
விளக்கவுரை :
4885. பாரேதான் புலிப்பாணி
மைந்தாகேளு பாங்குடனே ஜம்புமகாரிஷியைக்கண்டேன்
ஆரென்று எந்தனையும்
வினவிக்கேட்க வப்பனே காலாங்கி சீஷனென்றேன்
நேரேதான் நெடுங்காலஞ்
சென்றசித்து நேர்மையுடன் என்மீதிற் கிருபைகூர்ந்து
வேரேதான் எந்தனது
சமாதிபக்கல் விருப்பமுடன் வருகுவதும் மெய்யேபாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments