HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 491 - 495 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 491 – 495 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 491 – 495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

491. கேளப்பா  வெடியுப்பு பலமேநூறு கெடியான சீனமது
நூற்றுப்பத்து
வாளப்பா சவுட்டுப்பு  இருபத்தைந்து மருவியதோர் துரிசியது  முப்பதாகும்
நாளப்பா நவாச்சாரம்  பலமும்பத்து நண்பான சத்தியென்ற  சாரமாச்சு
காளப்பா கல்லுப்புப்  பலமும் அஞ்சு கடிசாகக்  கல்வத்தில் 
பொடியாய்ப்பண்ணே
விளக்கவுரை :
492. பொடிபண்ணி பிரண்டைசார்
தன்னினாலே பூணியரைத்து ஏழுநாள் பில்லைசெய்து
கெடிபண்ணி  ரவிதனிலே உலரப்போட்டு கெட்டியாம்  பாண்டத்தில் அரைவாசியிட்டு
தடிபண்ணிச்  சக்கரமாம் 
பானைதன்னை சாங்கமாய் 
மூடியெல்லாம்  சீலைமண்செய்து
துடிபண்ணி அடுப்பேற்றி
தீயைமூட்டித்  துப்புரவாய்த் தீநீரை
வாங்குவாங்கே
விளக்கவுரை :

[ads-post]
493. நீரிலே வெள்ளைநீர்  தனையகற்றி நேர்பான சிவந்தநீர்  தன்னைவாங்கிச்
சீரிலே யரக்கான
தய்யர்தன்னில் சிறப்பாக  அடைத்துவைத்து
சேதிகேளு
தூரிலே சூதமது பலந்தான்பத்து
சூஷாதி கல்லுப்பு அஞ்சுமாகும்
ஊரிலே  துரிசியது ரண்டரையே பலந்தான் முற்பனமாம்
வெடியுப்பு ரண்டுபலமுமாமே
விளக்கவுரை :
494. ஆமப்பா சீனமது  ரண்டுபலமாகும் அன்னமென்ற  பேதியது பலமுமிரண்டு
ஓமம்பா  சாரமது பலமும்ரண்டு உறுதியாம்  பூநீரு பலமும்ரண்டு
காமப்பா  லிங்கமது பலமுமெட்டுக் கம்பிரசகர்ப்பூர
பலமுமெட்டு
காமப்பா   வெள்ளையது பலமேயொன்று  நற்கெவுரிமனோசிலையும் பலமுமொன்றுபோடே
விளக்கவுரை :
495. போடவே பலமொன்று கெந்திதானும் புகழான சூடனது பலமுமொன்று
வாடவே தொட்டியொடு அப்புரக
நிமிளை வர்த்தமொடு வைகிருந்து தமர்காந்தலோகம்
தேடவே கற்காதி சாத்திரவேதி
சிறப்பான சிங்கியொடு குதிரைப்பல்லு
நீடவே அஞ்சனக்கல்
துத்தத்தோடு கெடிதான சலாசித்துக் கல்நார்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments