HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4986 - 4990 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4986 – 4990 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4986 – 4990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4986. கூறினேன் இத்தாதி
காட்சியெல்லாம் குவலயத்தில் யாரேனுங்கண்டதில்லை
மீறியே எந்தனது
புண்ணியத்தால் மிக்கான காலாங்கி கடாட்சத்தாலும்
தேறியே மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் தேற்றமுடன் மேருகிரி தன்னில்சென்றேன்
சீறியே என்மீதில்
சினந்துமல்லோ சிதாபரசனமந்தேறிசென்றிட்டேனே
விளக்கவுரை :
4987. சென்றேனே ஆதியென்ற
கடவுள்காணேன் சிறப்பான வெகுமகிமை யானுங்கண்டேன்
குன்றான மேருகிரி
தன்னில்யானும் குறையாமல் கடவுளது மகிமைகண்டேன்
வென்றிடவே யாதியென்ற
வஸ்துகாணேன் வீணாக வனாதியென்ற வஸ்துகண்டேன்
நின்றதொரு தேவாதிதேவர்தாமும்
நிகட்சியுடன் பதாம்புயத்தை தவஞ்செய்வாரே
விளக்கவுரை :

[ads-post]
4988. தவமான மேருகிரி தன்னிலப்பா
தண்மையுள்ள தேவாதிதேவரெல்லாம்
சவம்போல யாகமது சென்றார்கள்
சாங்கமுடன் தேவனையுங் கண்டாரில்லை
பவமகற்றி மேருகிரி
தன்னில்தானும் பட்சமுடன் சாகமது செய்துமென்ன
அவப்பொழுதும்
தவப்பொழுதுங்கொண்டு மென்ன அவர்களுந்தான் ஒருபலமுங்
காணார்தாமே
விளக்கவுரை :
4989. தானான கைலாயபதியில்தானும் சட்டமுடன் தேவாதிதேவர்தானும்
கோனான கடவுள்தனின்
பதாம்புயத்தை கொற்றவரு மாண்பர்களுங் கண்டதில்லை
தேனான மனோன்மணியாள்
முதலானோரும் தெளிவான சங்கையதை யறிவதில்லை
பானான பரலோகங்கண்டுமென்ன
பாரினிலே கடவுள்தனைக் காணார்தானே
விளக்கவுரை :
4990. காணாமல் கைலாசம்கண்டுமேதான்
கருத்துடனே பாடிவைத்த நூல்களெல்லாம்
வீணாகவாதியந்த பொருள்காணாமல்
விட்டமுறை பித்ததென்று வீம்புபேசி
தோணாத பொருள்களெல்லாம்
நூலில்கூறி தொகுப்புடனே சாத்திரங் கட்டிவைத்தார்
ஆணாக பெண்ணாக பிறந்தகூர்மை
அவனிதனிற் கண்டதல்லா லில்லைதானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments