HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5036 - 5040 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5036 – 5040 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5036 – 5040 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5036. கேளப்பா யவரவர்கள் கையிலப்பா
கெடியான பச்சரிசி நிரம்பவுந்தான்
ஆளப்பா தனித்தனியே
கொடுத்துமைந்தா வப்பனே யவர்களுக்கு வணக்கங்கூறி
மாலப்பா மாண்பர்களே
நீங்களெல்லாம் மயங்காமல் பொருளெடுக்கவில்லையென்று
தேளப்பா கொட்டினது போலேயப்பா
தேற்றமுடன் யான்கூறும் மொழியைக்கேளே
விளக்கவுரை :
5037. மொழியான வார்த்தையது
என்னவென்றால் மோசமில்லை நீங்களுந்தான்
நடுங்கவேண்டாம்
வழியுடனே பச்சரிசி
வாயிலிட்டு வண்மையுடன்தான்மென்று மைந்தாகேளு
சுழியான வாயில்மென்ற
வரிசிதன்னை சூட்சமுடன் பூமிதனில் முழியவேண்டும்
பழியான எலுமிச்சம்
பழத்தையப்பா பாண்மையுடன் வாய்தனிலே கடிப்பாய்தானே
விளக்கவுரை :

[ads-post]
5038. கடித்துமே பழரசத்தை
மாணாக்காளே கருத்துடனே பூமிதனில் முழியவேண்டும்
துடிப்புடனே
பொருளெடுக்கவில்லையென்று தூய்மையுடன் சத்தியங்கள் செய்யவேண்டும்
நடித்துமே சோதனைகள்
தந்துமல்லோ நலமுடனே செல்கவென்று விடையுந்தந்து
முடித்துமே மந்திரங்கள்
ஓதினாற்போல் முனையான தலைவாசல் முன்னேநில்லே
விளக்கவுரை :
5039. நிற்கையிலே மாண்பரெல்லாம்
சோதித்தாகிவந்து நிலையான நிலைதனிலே நிற்கும்போது
அற்பமென்று நினையாமல்
வவரவர்கள்தன்னை அன்புடனே தான்நினைந்துவப்பாகேளு
சொற்படியே நீயுமிந்த
வரிசிதன்னை சொந்தமுடன் காட்டவென்று வினயங்கேளு
உற்பனமா யுமிழ்ந்ததொரு
வரிசியப்பா ஓகோகோ குழம்புபோலிருக்கும்பாரே
விளக்கவுரை :
5040. பாரப்பா பொருளெடுத்தோன் வரிசிதானும் பான்மையுடன் பொடிபொடியாய் இருக்கும்பாரு
நேரப்பா யெடுக்காத
பேர்கட்கெல்லாம் நேர்மையுடன் வரிசியது குழம்பாய் நிற்கும்
சீரப்பா பழமது
வுமிழ்ந்தபேர்கள் சிறப்பான நாவதனில் ரசமுண்டாகும்
ஆரப்பா யெடுக்காத
பேர்கட்கெல்லாம் அப்பனே ரசமதுவுமதிகங்காணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments