HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5131 - 5135 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5131 – 5135 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5131 – 5135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5131. செய்யவே பாண்டமது
கலசந்தன்னில் செயலான வித்தையது எல்லோர்காண
பையவே பூசனியாம் பிஞ்சுதன்னை
பாங்குடனே மட்பாண்டந்தன்னிலிட்டு
மெய்யுடனே சின்னவாய்
கொண்டபாண்டம் மெல்லெனவே பூசனிக்காய் வளர்ந்துமல்லோ
கொய்தபின்பு தனையெடுத்து
பாண்டந்தன்னை கொப்பெனவே ரவிதனிலே
வைக்கக்கேளே
விளக்கவுரை :
5132. கேளேதான் பாண்டமது
ரவியில்வைக்க கொடியான காயதுவும் பழமேயாகி
நானேதான் முத்தினதோர்
பழமுந்தானும் நலமான பாண்டத்தில் உருளும்பாரு
சூளேதான் கலசமென்ற
பாண்டந்தன்னை துப்புரவாய் பதனமது செய்துகொண்டு
ஆளேதான் தலைமீதில்
குடத்தைவைத்து வன்புடனே ஜாலமது செய்வாய்தானே
விளக்கவுரை :

[ads-post]
5133. தானான சபையேறி வேந்தர்முன்னே சட்டமுடன் மாணாக்கள் கூடிருக்க 
கோனான வேந்தர்களும்
திடுக்கிட்டேங்க கொற்றவனே பாண்டமதை முன்னிறக்கி
தேனான பூசனிக்காய்
வேறங்கான்று தேற்றமுடன் சபையோர்முன் கொண்டுவந்து
பானான பராபரியை மனதிலெண்ணி
பட்சமுடன் ஜாலமது செய்துகாட்டே
விளக்கவுரை :
5134. காட்டவே தனக்குகந்த சீஷனாக
கருவாக மர்மமதை யவனுக்கோதி
நீட்டமுடன் பாண்டமதை
யவன்கைதந்து நிறையவே ஜலமதனைக்கொடுவாவென்று
வாட்டமுடன் பாண்டமதில்
ஜலமும்நிற்க வாகுடனே வலுவேந்தர்பார்த்திருக்க
நீட்டமுடன் மரமென்ற
டோலிதன்னை நினைவாக யவன்கழுத்தில் மாட்டிடாயே
விளக்கவுரை :
5135. மாட்டியே திரைவளைத்து
மதியம்பூண மார்க்கமுடன் எல்லவரும் பார்த்திருக்க
தாட்டிகவாய்
ரவியதனிலிருந்துகொண்டு சட்டமுடன் பூசனிக்காய்தனையெடுத்து
நீட்டமுடன் டோலியென்ற
கச்சைக்குள்ளே நினைவுடனே யாருமதுங் காணாமற்றான்
பூட்டகமாய் பூசனிக்காய்
தனையெடுத்து பொங்கமுடன் டோலிக்குள் பொதிவாய்மூடே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments