HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5146 - 5150 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5146 – 5150 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5146 – 5150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5146. சொல்லவே கற்பூரம்
விளக்கில்லாமல் துப்புறவாய் ஜோதியுடன் எறியும்பாரு
வெல்லவே தீபமது தூரநிற்க
வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
மெல்லவே எறிந்த
வண்ணந்தன்னைப்பார்த்து மேதினியில் மாந்தரெல்லாம் மெய்நடுங்கி
கொல்லவே வந்ததொரு
பூதந்தானும் கொப்பெனவே கற்பூர மெறியலாச்சே
விளக்கவுரை :
5147. ஆச்சப்பா ஜாலமென்ற
தந்திரவேதை வதரணங்கள் தன்னாலே எறியலாச்சு
மூச்சொடுங்கிப் போயிருந்த
பூரந்தானும் முனையான கொழுந்துவிட்டு எறியும்வண்ணம்
பாச்சலுடன் மாண்பர்களுங்
கண்டுமல்லோ பாங்குடனே யதுபுதுமைகாலமென்பார்
ஆச்சரிய மானதொரு
வித்தைதானும் அவனியிலே யாரறிவார் புத்திமானே
விளக்கவுரை :

[ads-post]
5148. புத்தியுள்ள புலிப்பாணி
மைந்தாகேளு பனிதமுடனுந்தமக்கு யின்னஞ்சொல்வேன்
சத்தியமாய்
கருமானமின்னவென்று சட்டமுடன் யானுரைப்பேன் மைந்தாகேளு
வெற்றிபெற மாண்பர்களில்
ஆயிரம்பேர் வெடிக்கை சிமிட்டுவித்தை வினோதம்பாரு
தத்துவமாய் சபையோர்கள்
முன்னதாக சார்புடனே கரங்குவித்து நிற்பார்பாரே
விளக்கவுரை :
5149. பாரேதான் சபையோர்கள் பார்த்திருக்க பண்பாகக் கேணிதனிலிறங்கிமுன்னே
நேரேதான் எரிகாலன் பாலையப்பா
நேர்மையுடன் கரந்தனிலே குழப்பிக்கொண்டு
சீரேதான் மறவிடமாய்
நின்றுகொண்டு சிறப்புடனே வெண்ணீர்போல் குழைத்துப்போடு
சீரான பாலதுவும் மாண்பருக்கு
நிறமான வெந்நீர்போல் தோற்றுநன்றே
விளக்கவுரை :
5150. அன்றான வெண்ணீரைப்
பூசிக்கொண்டு வன்பான கேணிதனில் வந்துநின்று
குன்றான பருவதம்போல்
கோடிமாண்பர் கொற்றவர்கள் திருமுகத்தைத் தானும்பார்த்து
வென்றிடவே யேகாந்தி
நிஷ்களம்போல் விருப்பமுடன் ஜலமதனில் மூழ்கியேதான்
சென்றுமே ஜலத்தைவிட்டுக்
கேணியேறி சிறப்புடனே சூரியனில் நிற்பாய்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments