HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5176 - 5180 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5176 – 5180 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5176 – 5180 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5176. காணவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் கருவான பொய்மசக்கல் தலையாட்டந்தான்
பூணவே கும்பமது கலசம்வைத்து
பொங்கமுடன் பேயாட்டங்கொள்ளும்போது
தோணவே லாகிரிகள் வஸ்துவாலும்
தொல்லுலகில் மாதர்மேல் சன்னதங்கள்
வேணபடி தன்மீதில்
வந்தாப்போலும் வெகுபிறட்டல் தலைசுழட்டல் அதிகந்தானே
விளக்கவுரை :
5177. தானான தெய்வமது வனேகங்கொண்டு
தாக்கான சன்னதங்கள் அதிகமாகி
கோனான தன்புருஷன்
தன்னைநோக்கி கொற்றவா எந்தனுக்கு யேர்வையில்லை
மானான மகுத்துவங்கள்
அதிகங்கொண்டு மன்னவர்க்கு தெய்வமது கூறினாப்போல்
பானான கரங்குவித்து
தலைமேற்கொண்டு பாலகனே பூசையில்லை யென்பார்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5178. பாரேதான் கன்னியர்மேல்
சன்னதங்கள் கைலாயவடிவேலன்தன்னைப்போல
நேரேதான் நிற்கிறவராறோ
நீர்தான் நீதியுள்ள வாண்பிள்ளை நினைவாய்க்கேளிர்
 சீரேதா னுந்தனுட மாளிதன்னில் சிறப்பான பூவாடைக்காரியப்பா
வேரேதான் கட்டுதற்கு
வாடையில்லை வித்தகனே மனங்கலங்கி நின்றாள்தானே
விளக்கவுரை :
5179. நிற்கவே பூவாடைக்காரிதானும்
நிட்களங்கமாகவல்லோ வெகுகாலந்தான்
துற்கையென்ற பிடாரியது
தானுமல்லோ துதியான காட்டேரி சின்னானப்பா
சொற்பழு வாராத
கருப்பன்தானும் சுடரொளியாஞ் சத்தகன்னிமாதுதானும்
கற்பமதை யாவிகொள்ளும்
ரத்தமுண்டி கருவழிக்கும் மாடனது நானுந்தானே
விளக்கவுரை :
5180. நானான தெய்வமப்பா
பூவாடையப்பா நன்மையுடன் சித்தடிமேல் மையல்கொண்டு
கோனான தேவதைகள் வாடைகட்டி
கொப்பெனவே சன்னதங்கள் அதிகங்கொண்டு
தேனான நடுவீட்டு
செல்லியத்தாள் தெளிவான வங்காள பூபதிதானப்பா
மானான ஈஸ்வரியாள்
எல்லைகாத்தாள் மகத்தான தெய்வமது வந்திட்டோமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments