HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5191 - 5195 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5191 – 5195 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5191 – 5195 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5191. நேமமுடன் செம்மறியின்
தலைதானப்பா நேர்மையுடன் கொண்டுவந்து மைந்தாகேளு
தாமமுடன்
கலசத்திற்கெதிரேவைத்து சட்டமுடன் வகண்டமது மேலேவைத்து
ஓமமுடன் யாகமது செய்வாயப்பா
வத்தமனே ஆயிரந்தான் வுருதான்போடு
சாமமது நடுச்சாம வேளையப்பா
சாந்தியது செய்யும்வகை தன்மைபாரே  
விளக்கவுரை :
5192. பாரப்பா பரசறுந்தியது
செய்யும்போது பட்சமுடன் பிரமையது போவதற்கு
நேரப்பா நோயாளி தன்னிலப்பா
நேர்மையுடன் கிரகமது போவதற்கு
சீரப்பா சடையதுவால்
பொம்மையொன்று சிறப்புடனே தானமைத்து வுபாயங்கேளு
ஆரப்பா தானறிவார்
வுபாயமார்க்கம் அப்பனே சொல்லுகி
bறென் அன்பாய்த்தானே
விளக்கவுரை :

[ads-post]
5193. தானான பிரதமைக்கு வாடைபூண்டு
சட்டமுடன் வாபரணமெல்லாம்பூண்டு
கோனான காலாங்கி சொன்னவாக்கு
கொற்றவனே பிசகாமலாமைதன்னை
பானான யாமையது கொண்டுவந்து
பாலகனே பிரதமையின் பாதத்தின்கீழ்
தேனான வுளுந்தினுட மாவையப்பா
திண்மையுடன் யாமையது வோட்டிற்பூசே
விளக்கவுரை :
5194. பூசியே பிரதமையின்
பாதத்தின்கீழ் புகழாக யாமைதனை பொதிந்துபோடு
காசியென்ற பட்டினால்
பாதந்தொட்டு பாங்குபெற வுடுப்பதுவும் பணிந்துமல்லோ
தூசிபடா பாதமது
தெரியாமற்றான் துப்புரவாய் பிரதமையைச் சாய்த்துவைத்து
கூசிடா வண்ணமது யோமசாந்தி
கொற்றவனே செய்துமல்லோ சொல்லக்கேளே
விளக்கவுரை :
5195. சொல்லவென்றால் பிரதமையை
நோயாளிமுன்னே சுத்தமுடன் தானிறுத்திவைக்கும்போது
வெல்லவே பிரதமைதான்
சுத்தியல்லோ விருப்பமுடன் தான்வருகும்போதிலப்பா
கொல்லவே வந்ததொரு கிரகமப்பா
கொற்றவனே பிரதமையின் மேலேயப்பா
புல்லவே  மையலதுபலியேகொண்டு கோபாலா போகுதடா யென்றுசெப்பே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments