HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5301 - 5305 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5301 – 5305 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5301 – 5305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5301. பாரேதான் இன்னமொரு
மார்க்கம்பாரு பாருலகில் மாணாக்கர் பிழைக்கவென்று
சீரேதான் சிடிகையென்ற
வேதைசொல்வேன் சிறப்பான நாதாக்கள் சொன்னதில்லை
நேரேதான் பலபலவாஞ்
சாத்திரத்தில் நேர்மையுடன் பாடிவைத்த சித்தரெல்லாம்
தீரேதான் நுணுக்கமென்ற
வேதைதானும் திறமுடனே பாடிவைத்த வுண்மைபாரே
விளக்கவுரை :
5302. உண்மையாய் மாணாக்கள்
பிழைக்கவென்று வுத்தமனே ஏமமென்ற சிடிகைவேதை
நன்மையென்ற
பாஷாணஞ்சிங்கிதானும் நயமான தாளகமும் பூரங்கூட்டி
வெண்மையெனும் குச்சியென்ற
வீரந்தானும் வெளியான கௌரியென்ற பாஷாணந்தான்
தண்மையுள்ள துருசுடனே
துத்தங்கூட்டி தகமையுள்ள வெடியுப்பு கூடச்சேரே
விளக்கவுரை :

[ads-post]
5303. சேர்க்கவே வெண்காரஞ்
சீனந்தானும் சிறப்பான நாகமுடன் சூதங்கூட்டி
ஏற்கவே மதியுப்பு
தானுஞ்சேர்த்து யெழிலான கெந்தகமுஞ் சாரங்கூட்டி
தீர்க்கமுடன் லிங்கமது
வொன்றாய்ச் சேர்த்து சிறப்புடனே சரியிடையாய் நிறுத்துக்கொண்டு
ஆர்க்கவே மூவகையின்
ஜெயநீராலே வப்பனே நாற்சாமம் அரைத்திடாயே
விளக்கவுரை :
5304. அரைத்துமே வில்லையது
லகுவாய்ச் செய்து வன்பான ரவிதனிலே காயப்போடு
வரைக்கலம் போலாகப்
பீங்கான்தன்னை வளமுடனே தானமைத்துப் பீங்கான்மூடி
திரையான சீலையது வலுவாய்ச்
செய்து திட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
சுரைபோல பூமிதனில்
குழிதானப்பா சுத்தமுடன் சாணிளம் குழிதான் செய்யே
விளக்கவுரை :
5305. செய்யவே குழிதனிலே
மணலைக்கொட்டி சிறப்புடனே மேலதனில் பீங்கான்வைத்து
பையவே மேலமந்த மணலைக்கொட்டி
பாங்குபெற புடமதுவும் யெருவுபத்து
வெய்யவே சுடராறிக்
குளிர்ந்தபின்பு வேதாந்தத் தாய்தனையே மனதிலுன்னி
உய்யவே செந்தூரந்
தனையெடுத்து வுத்தமனே குழிக்கல்லிற் தன்னிற்போடே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments