HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5321 - 5325 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5321 – 5325 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5321 – 5325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5321. காண்பாயே யிந்தமுறை
பத்துவிசையோடு களிப்பான செம்பதுவும் வூறலற்று
ஆண்பான வல்லிமலர்
போல்நிறந்தான் வப்பனே சுந்தரா யென்னசொல்வேன்
வீண்போகா திந்தமுறை
செய்துமல்லோ விருப்பமுடன் முன்சொன்ன செந்தூரத்தை
நாள்படவே ரவிதனையே
யுருக்கிக்கொண்டு நலம்பெறவே செந்தூரம் பத்துக்கொன்றே
விளக்கவுரை :
5322. ஒன்றான செந்தூர
மென்னசொல்வேன் உத்தமனே பத்துக்கு ஒன்றே யீந்து
குன்றான செம்பொன்றுங்
கூடச்சேர்த்து கொற்றவனே வாரடித்துப் புடத்தைப்போடு
வென்றிடவே சொகுசாவின்
கடைதானப்பா வித்தகனே சிவவேடம் பூண்டோர்க்கெல்லாம்
நன்றான கவசகுண்டலத்துக்காதி
நாயகனே என்னசொல்வேன் வதீதம்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5323. பாரேதான் முன்சொன்ன
செந்தூரத்தை பட்சமுடன் செய்வதற்கு மைந்தாகேளு
சீரேதான் மதியுப்பு
சீனத்தோடு சிறப்பான வுமருப்புக் கூடச்சேர்த்து
நேரேதான் வாயென்ற
பாத்திரத்தில் நெடிதான செயநீரால் இறக்கிமைந்தா
நீரேதான் சீசாவில்
அடைத்துக்கொண்டு நிகழான செந்தூர மரைப்பாய்தானே
விளக்கவுரை :
5324. தானான செயநீரின்
போக்கைத்தானும் தண்மையுள்ள நாதாக்கள் சொன்னதில்லை
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த முறைப்பாடெல்லாம்
பானான வையகத்தோர்
பிழைக்கவென்று பாருலகில் பாடிவைத்த குருநூலாகும்
வேனான சாத்திரத்தின்
வுளவாராய்ந்து விட்டகுறை யிருந்தோர்க்கு லபிக்கும்பாரே
விளக்கவுரை :
5325. பார்க்கவென்றால் இன்னமொரு கருமானம்பார் பாடுகிறேன் புலிப்பாணி மைந்தாகேளு
தீர்க்கமுடன் பேரண்டந்
தலையண்டந்தான் திறமான ஓடதுவும் கொண்டுவந்து
ஆர்க்கவே வெடியுப்புக்
கூடச்சேர்த்து வப்பனே மூலிகையின் செயநீர்தன்னில்
ஏர்க்கவே நாற்சாமம்
அரைத்துபாலா யெழிலாக வில்லைதட்டி காயவையே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments