HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5361 - 5365 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5361 – 5365 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5361 – 5365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5361. அறிவான செந்தூர
மென்னசொல்வேன் வப்பனே குன்றியிடை தானெடுத்து
முறியாத வெள்ளிதனில்
பத்துக்கொன்று முறையாகத் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
குறியான மாற்றதுவும்
யேழதாகும் கொற்றவனே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து
முறிபோன்ற மூசைதனில்
உருக்கிக்கொண்டு மயங்காமல் புடத்தகட்டாய் வடித்துப்போடே
விளக்கவுரை :
5362. அடித்துமே தகடதனை
யருண்மைந்தாகேளு அப்பனே முன்சொன்ன செந்தூரத்தை
நடிக்கமலம் வீற்றிருக்கும்
மனோன்மணித்தாய் நாதாந்தத் தேவியரின் தாள்பணிந்து
படியான செந்தூரம்
பரித்தகட்டில் பக்குவமாய்த் தான்பூசிப் புடத்தைப்போடு
கடியான கடிசதுவும்
மிகவேநீங்கி கனகமென்ற தங்கமது வாங்கும்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5363. தங்கமாம் பரிதியென்ற
பிரிவியாச்சு தாரணியில் நாதாக்கள் செய்யும்வேதை
பங்கமது நேராது
வொருக்காலந்தான் பாரினிலே தருமிகட்கு கிட்டும்பாரு
குங்குமப்பூ தன்னிறமாகத்
தங்கந்தங்கம் குவலயத்தில் காண்பதுவும் அறிதேயாகும்
அங்கமென்ற குகைதனிலே
இருக்குஞ்சித்தர் சட்டமுடன் செய்கின்ற பாகந்தானே
விளக்கவுரை :
5364. தானான யின்னமொரு பாகங்கேளு
தண்மையுள்ள செந்தூரம் திரிவங்கந்தான்
கோனான கரிவங்கம்
வெள்வங்கந்தான் கொற்றவனே நாகமது சரியாய்க்கூட்டி
மானான ஜெயநீராம்
என்னசொல்வேன் மகத்தான ஆறுவகை ஜெயநீர்தன்னில்
பானான மூன்றுவகை
திரிவங்கந்தான் பட்சமுடன் குகைதனிலே வுருக்கித்தீரே
விளக்கவுரை :
5365. உருக்கியே ஜெயநீரில் தாக்குதாக்கு வுத்தமனே நாகமது கண்ணுறங்கி  
பெருக்கமுள்ள கண்ணதுவும்
தானொடுங்கி பேரான சவளையது போலேயாகும்
நெருக்கமுடன் சூதமது
நிகராய்ச் சேர்த்து நேர்மையுடன் கல்வமதிலிட்டு மைந்தா
பொருக்கவே கெந்தியது
நாலுக்கொன்று பொங்கமுடன் தான்சேர்த்து வரைக்கக்கேளே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments