HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5376 - 5380 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5376 – 5380 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5376 – 5380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5376. முதலான முப்புவென்ற
பலகைதன்னை முயற்சியுடன் பிரதியென்ற மூசையிட்டு
பதமுடனே தானுருக்கி
யெடுத்துமைந்தா பாலகனே மயிர்கம்பி இரும்பாலப்பா
கதமுடைய ரசமதுபோல்
நூணிருத்தி கசகாமல் பலகைதனை வுருக்கிக்காய்த்து
இதமுடனே மண்கவசந்
தன்னைநீக்கி யெழிலான மணியதனைக் கொட்டுவீரே
விளக்கவுரை :
5377. கொட்டவென்றால் மணியதுவும்
சதகோடிகாணும் கொற்றவனே பூநீராம்பலகைதன்னை
திட்டமுடன் தானுடைத்து
மூசையிட்டு திறமுடனே பாலமணியமைக்கவில்லை
குட்டமுள்ள தொங்கலது
நூறுகம்பம் குறிப்பாக மயிர்கோதி தொங்கவிட்டு
பட்டதொரு பூநீரின் பலகைதன்னை
பாங்குபெற கடல்நுறையால் சுத்திசெய்யே
விளக்கவுரை :

[ads-post]
5378. செய்துமே தானுருக்கி
யெடுத்துமைந்தா செம்மலுடன் கருக்கட்டி வார்க்கும்போது
பையவே யிரும்பினது
மயிர்ப்பாய்ச்சலப்பா பாங்கிபெற பூநீறு வுருக்கிச்சென்று
மெய்யான கருவதனில்
பாய்ந்துமல்லோ மேன்மையுடன் சதகோடி மணிகளாகும்
பொய்யாது காலாங்கி
நாதர்வாக்கு பொங்கமுடன் செய்துவர வரிசைகேளே 
விளக்கவுரை :
5379. கேளேதான் கவசமது
வுடைத்துப்பாரு கெடியான பாலமணியென்னசொல்வேன்
பாளேதான் போகாமல் மணியுமாகி
பாங்கான பூநீரு மணியுமாச்சு  
நாளேதான் விட்டகுறை
யின்னமொன்று நலமான பச்சைமணி புகலுவேன்பார்
சூளேதான் பூநீரு பலகைதன்னை
சுத்தமுடன் தானெடுக்க வரிசைகேளே
விளக்கவுரை :
5380. வரிசையாம் இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
பரிசையுள்ள பூநீருபலகைதன்னை
பாங்குபெற ரங்கென்ற பூநீர்தன்னை   
விரிவுடனே தான்சேர்த்து
வுருக்கியல்லோ விருப்பமுடன் கருக்கட்டிவார்க்கும்போது
சரியான கருவதனில்
பாய்ந்துமல்லோ சட்டமுடன் மயிர்பாச்சல் நிறையலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments