HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5401 - 5405 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5401 – 5405 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5401 – 5405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5401. தீரேதான் செந்தூரமென்ன
சொல்வேன் திறமான நவகோடி ரிஷிகளப்பா
பூரேதான் சொன்னார்கள்
இந்தபோக்கு வப்பனே யாமுனக்கு சொன்னோம்பாரு
சீரேதான் நாதாக்கள்
சொன்னதில்லை சிறப்பான கல்லுப்பு மார்க்கவேதை
வீரேதான் பலபலவாஞ்
சாஸ்திரத்தில் விருப்பமுடன் பாடிவைத்தார் கோடியாமே
விளக்கவுரை :
5402. கோடியாம் லவணமென்ற
செந்தூரத்தை கொப்பெனவே மூலிவகை தன்னிலப்பா
நாடியே யாராய்ந்து
சொன்னாரப்பா நலமான ஜெயநீர்தான் சொல்லவில்லை
மூடியே தான்மறைத்தார்
ஜெயநீர்போக்கை முதன்மையா யானுரைத்தேன் ஜெயநீர்தன்னை
வாடியே மயங்காமல்
செந்தூரத்தை வளமுடனே செய்பவனே வாதியாமே
விளக்கவுரை :

[ads-post]
5403. வாதியாஞ் செந்தூரந்
தன்னைத்தாக்க வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு
சோதியாம் ரசிதமென்ற
வெள்ளிதன்னில் துப்புரவாய்ப் பத்துக்கு வொன்றேயீய
நீதியாய் மாற்றதுவும்
எட்டேயாகும் நிலையான நாதாக்கள் செய்யும்வேதை
ஆதியாம் தேவரிஷி
முனிவர்தாமும் அன்புடனே செய்த செந்தூரந்தானே
விளக்கவுரை :
5404. தானான செந்தூரப் போக்குதன்னை
தண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதியாக
பானான பராபரியை மனதிலெண்ணி
பாச்சப்பா செம்புதனில் பத்துக்கொன்று
மானான மாற்றதுவும்
ஒன்பதாகும் மகத்தான வேதையிது யதிதம்பாரே
விளக்கவுரை :
5405. பாரேதான் செந்தூர
மேகும்போக்கு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நேரேதான் குடவனில்
பத்துக்கொன்று நேர்மையுடன் தான்கொடுக்கத் தங்கமாகும்
சீரேதான் சுயத்தங்கம்
பிறவித்தங்கம் சிறப்பான சித்தாது தங்கமாகும்
ஆரேதான் செய்வார்கள்
பிறவித்தங்கம் வப்பனே அறிவுளோன் செய்வான்காணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments