HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5406 - 5410 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5406 – 5410 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5406 – 5410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5406. காணவே செந்தூரம்
போகும்போக்கு பாலகனே சொல்லஉகிறேன் பண்பாய்க்கேளு
பூணவே மட்டமென்ற
ஆணிப்பொன்னாம் பொங்கமுடன் களஞ்சியது நூறதாகும்
வேணபடி தானெடுத்து
மூசையிட்டு விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய
நீணவே மாற்றதுவும்
ஒன்பதாகும் நிலையான பிறவியென்ற பசும்பொன்னாமே
விளக்கவுரை :
5407. பொன்னான பொன்னல்லோ நாதர்வேதை
பொங்கமுடன் யார்செய்வார் வையகத்தில்
கன்னானக் கருவூரான்
முன்ஜென்மத்தில் கைலாயநாதரென்ற நடேசருக்கு
தென்னவனாம் பாண்டியரின்
வுத்தாரந்தான் தேர்வேந்தன் சொற்படிக்குக் கருவுசெய்து
நன்னயமாய்த் தங்கமென்ற
செம்புசெய்து நாதரைப்போல் கருவுசெய்து நாட்டினாரே
விளக்கவுரை :

[ads-post]
5408. நாட்டினார் கருவூரார்
தங்கமப்பா நாயகனே யித்தங்கம் ஒப்பதாகும்
மேட்டிமையாய் அனேகம்பேர்
சித்துதாமும் மேன்மையுடன் பலபலவாம் வாதஞ்செய்து
தாட்டிகமாய் தரணிதனில்
பூசைக்கி தாரணியில் வெகுபேர்கள் செய்தார்மாண்பர்
வட்டமுடன் காலாங்கி
முறைகள்போல வையகத்தில் கண்டதில்லை யாருந்தானே
விளக்கவுரை :
5409. தானான செந்தூரந் தன்னையப்பா தண்மையுடன் மண்டலந்தான் கொண்டபேர்க்கு
கோனான காலாங்கி நாதர்தாமும்
கொற்றவனார் குருசொன்னவாக்குபோல
பானான சட்டையது மிகவேநீங்கி
பளபளத்து தேகமது மின்னும்பாரு
மானான மஹேஸ்வரியாள்
நிர்த்தஞ்செய்வாள் மன்னவனே யுந்தமக்கு வழிசொல்வேனே
விளக்கவுரை :
5410. சொல்வேனே யின்னமொரு
மார்க்கங்கேளு துப்புரவாய் புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் குருசொன்ன நீதியப்பா
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் தெள்வான வஞ்சனமாம் சல்லியப்போக்கு
மானான வண்டமென்ற காகமப்பா
மகத்தான சத்தூறு வருஷமாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments