HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5431 - 5435 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5431 – 5435 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5431 – 5435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5431. காணவே கேட்டதெல்லாம்
உந்தனுக்கு கனமுடனே தான்கொடுத்து வினோதஞ்செய்வார்
பூணவே கிருஷ்ணாவதாரனைப்போல்
பொங்கமுடன் மதனகனையைத் திறவாயப்பா
ஆணவே ராஜாதிராஜர்போலும்
வப்பனே சிற்றின்ப வாசைதன்னை
காணவே வையகத்தில் அனுபவித்து
காட்சியுடன் எந்நாளும் பதங்கொள்வாயே
விளக்கவுரை :
5432. கொள்ளவே யின்னமொரு
பாகஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
விள்ளவே சித்துமுனி
ரிஷியார்தாமும் வெகுவாய்ப் பாடிவைத்தார் ஈடுமார்க்கம்
மெள்ளவே யவர்களுட
சாத்திரங்கள் மேதினியில் வெகுபலவாய்க் கண்டேன்யானும்
கள்ளமில்லா முரையனைத்துங்
கோடாகோடி காசினியில் விருப்பமுடன் பாடினாரே
விளக்கவுரை :

[ads-post]
5433. பாடினார் அனேகவிதை யீடுதானும் பண்பான மாணாக்கள் பிழைக்கவென்று
தேடியே புலிப்பாணி
மைந்தாகேளு தெளிவான ஈடொன்று சொல்வேன்பாரு  
நீடியே லடைக்கலமாங்
குருவிதானும் நீண்மையுடன் கொண்டுவந்து செப்பக்கேளிர்
ஆடியே மயிர்போக்கி
குடல்கள்போக்கி வப்பனே சூதமுடன் காந்தந்தானே
விளக்கவுரை :
5434. தானான பாஷாணங் கவுரிதானும்
தாக்கான தாளகமுமொன்றாய்க்கூட்டி
மானான கெஞ்சாவின்
வித்தும்சேர்த்து மகத்தான எலிப்பகையுங் கூடச்சேர்த்து
தேனான குடோரியது சமனதாக்கு
தேட்டமுடன் அடைக்கலத்தின் வாயிலூட்டி
பானான கலசமென்ற
குடுவைதன்னில் பாங்குபெற தானமைத்து வஸ்துவூட்டே
விளக்கவுரை :
5435. ஊட்டியே சாராயமென்ற வஸ்து
வுத்தமனே தான்சேர்த்து தீயில்வைத்து
தாட்டிகமாய் வூமத்தின்
விறகினாலே தகமையுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
நாட்டமுடன் சாராய
சுண்டமட்டும் நலம்பெறவே தானெரித்து யெடுத்துமைந்தா
கூட்டியே குழிக்கல்லில்
தன்னிலிட்டு கொற்றவனே நாற்சாமம் அரைத்திடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments