HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5426 - 5430 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5426 – 5430 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5426 – 5430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5426. வந்தேனே சீனபதிவிட்டு மைந்தா
மகத்தான குளிகையது பூண்டுகொண்டு 
அந்தமுடன் வையகத்து
மாண்பருக்கு வன்புடனே யான்கண்ட வித்தையெல்லாம்
சொந்தமுடன் உபதேசம்
செய்யவெண்ணி துப்புரவாய் அதிதமெல்லாம் உரைத்தேனப்பா
பந்தமுடன் எந்நாளும்
பதாம்புயத்தை பற்றியல்லோ பதவிவழி நடந்திடாயே

விளக்கவுரை :
5427. நிற்கவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் நிலையான புலிப்பாணி மைந்தாகேளு
வற்பமென்று நினையாதே
யிந்தப்போக்கு வருமையுள்ள சீனபதிப்பெண்களுக்கு
சொற்பதமாய் ஈடொன்று
சிடிகைவேதை செப்பினேன் சீனபதிப்பெண்களுக்கு
வுற்பனமாய் யானுரைத்த
கைமசக்கு வுத்தமனே ஈறுவகை சொல்வேன்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5428. பாரேதான் மருளினூமத்தைவித்து
பாங்கானகாய்ப்பாகல் வித்துங்கூட்டி 
நேரேதான் சாதிக்காய்
தன்னோடொக்க நேர்மையுடன் கொவ்வையுட வித்துதானும்
சீரேதான் சுழல்வண்டு
தானுமப்பா சிற்பரனே குழியானைத் தானுங்கூட்டி 
வீரேதான் காந்தமது
தானுங்கூட்டி விருப்பமுடன் ஈப்புலியுங் கூடக்கூடே
விளக்கவுரை :
5429. கூட்டியே மதனபூவும்
வபின்கிராம்பு கொற்றவனே பேய்க்கருப்பன் சாற்றாலாட்டி
வாட்டமுடன் தானரைப்பாய்
நாலுசாமம் வகையாக யிடைசரியாய் தானரைப்பாய்
நாட்டமுடன் பயிரதுபோல்
திரட்டிமைந்தா நயம்பெறவே குளிகையது செய்துகொண்டு
வாட்டமுடன் மதியீடு
பெண்களுக்கு வப்பனே கொடுத்துவிட வகைதான்கேளே
விளக்கவுரை :
5430. வகையான குளிகைதனை பதனம்பண்ணு
வன்மையுடன் அறுகலையாந் தன்னிற்றானும்
சிகையான பார்த்தவகை
தன்னிற்றானும் சிறப்புடனே யுனதுவிந்து கூடச்சேர்த்து
பகையான மாந்தர்கட்கு
கொடுத்தாயானால் பண்பான மனதுவந்து பிரியமாகி
திகையான
மதிமயக்கங்கொண்டுமல்லோ தீரமுடன் உன்னைவந்து யனைவார்காணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments