HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 6126 - 6130 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 6126 – 6130 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 6126 – 6130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6126. சொல்லவே யின்னமொரு
மார்க்கங்கேளு சுந்தரனே புலிப்பாணி மன்னாபாரு
வெல்லவே நாதாக்கள்
சொல்லவில்லை வேதாந்தத் தாயாருஞ் சொல்லவில்லை
புல்லவே காலாங்கிநாதர்தாமும்
புகழான வகஸ்தியருங் கூறவில்லை
நல்லதொரு குளிகையது
பூண்டதாலே நாட்டிலே நானுமல்லோ வறிந்திட்டேனே
விளக்கவுரை :
6127. அறிந்தேனே பொன்னினாவாரையப்பா
வழகான மலைதோறும் சுனைகள்தோறும்
செறிந்துமே மூலிகையின்
வுளவுபார்த்து செம்மலுடன் முப்பூவுங் களஞ்செடுத்து
முறிந்துமே போகாமல்
தயிலமாக்கி மூர்க்கமது வாராமல் மனதிலுன்னி 
கு
றித்ததொரு தயிலமதை
யெடுத்துக்கொண்டு கொற்றவனே குடவனிலே பூசிடாயே
விளக்கவுரை :

[ads-post]
6128. பூசிடவே குடவனிலே என்னசொல்வேன்
புகழான நாதாக்கள் கூறவில்லை   
காசியென்ற செம்பதுவுங்
காணும்போது கனமான மாற்றதுவும் இருநூற்றெட்டு  
மாசிபடா தங்கமது
என்னசொல்வேன் மகத்தான பிரதிவென்ற தங்கமாச்சே
ஊசியென்னும் இரும்பினிலே
தாக்கினாக்கால் வுத்தமனே சுயத்தங்கம் அயத்தங்கமாமே
விளக்கவுரை :
6129. தங்கமாம் இன்னமொரு
வதிதஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மகனேகேளு
அங்கமாம் பொன்னூமத்தையப்பா
அழகான மூலியது கொண்டுவந்து
துங்கமாம் வழலையது
வராகனொன்று துப்புரவாய் மூலியது சாற்றினாலே
பொங்கமுடன் மதியென்ற
தகட்டிலப்பா புகழாகப் பூசிடவே யேமமாமே
விளக்கவுரை :
6130. ஏமமாங் காயாதி கொண்டமூலி
எழிலான காயகற்ப மூலியாகும்
சாமமென்ற மூலியது வாணமூலி
தாக்கான சித்தருண்ணும் மூலியாச்சு
வாமமுடன் மாற்றதுவும்
எழுநூற்றெட்டு வளமான சுயத்தங்கம் பிறவித்தங்கம்
நேமமென்ற பூசைக்குக்
கருவித்தங்கம் நெடிதான சித்துமுனி மூலியாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments