HomeUncategorizedThirukural 111 of 1330 - திருக்குறள் 111 of 1330

Thirukural 111 of 1330 – திருக்குறள் 111 of 1330

Thirukural
111 of 1330 –
திருக்குறள் 111 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
நடுவு நிலைமை.
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Translation:
That equity which consists in acting with
equal regard to each of (the three) divisions of
men [enemies, strangers and friends] is a
pre-eminent virtue.
Explanation:
Is there any fastening that can shut in
love ? Tears of the affectionate will publish the love that is within.
கலைஞர் உரை:
பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

[ads-post]

மு. உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
மணக்குடவர் உரை:
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.
பரிமேலழகர் உரை:

தகுதி என ஒன்றே நன்றுநடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத்தகுதிஎன்றார்.”ஊரானோர் தேவகுலம்என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபுதோறும் தன் பொருட்டாய் நின்றது. ‘பெறின்என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments