HomeUncategorizedThirukural 1163 of 1330 - திருக்குறள் 1163 of 1330

Thirukural 1163 of 1330 – திருக்குறள் 1163 of 1330

Thirukural
1163 of 1330 –
திருக்குறள் 1163 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : படர்மெலிந்திரங்கல்.
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
Translation:
My soul, like porter’s pole, within my
wearied frame,
Sustains a two-fold burthen poised, of love
and shame.
Explanation:
(Both) lust and shame, with my soul for
their shoulder pole balance themselves on a body that cannot bear them.
கலைஞர் உரை:
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.

[ads-post]
மு. உரை:
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.
மணக்குடவர் உரை:
வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாககாவடித்தண்டாக: தூங்குதல்தொங்குதல்) இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமமும் நாணும்காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்துதம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும்உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. ‘தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments