HomeUncategorizedThirukural 1182 of 1330 - திருக்குறள் 1182 of 1330

Thirukural 1182 of 1330 – திருக்குறள் 1182 of 1330

Thirukural
1182 of 1330 –
திருக்குறள் 1182 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பசப்புறுபருவரல்.
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
Translation:
‘He gave’: this sickly hue thus proudly
speaks,
Then climbs, and all my frame its chariot
makes.

Explanation:
Sallowness, as if proud of having been
caused by him, would now ride on my person.
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.

[ads-post]
மு. உரை:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
மணக்குடவர் உரை:
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்புஇப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால்என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும்என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. (‘குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல‘ (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. ‘அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டாஎன்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments