HomeUncategorizedThirukural 1212 of 1330 - திருக்குறள் 1212 of 1330

Thirukural 1212 of 1330 – திருக்குறள் 1212 of 1330

Thirukural
1212 of 1330 –
திருக்குறள் 1212 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : கனவுநிலையுரைத்தல்.
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
Translation:
If my dark, carp-like eye will close in
sleep, as I implore,
The tale of my long-suffering life I’ll
tell my loved one o’er.
Explanation:
If my fish-like painted eyes should, at my
begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
கலைஞர் உரை:
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

[ads-post]
மு. உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், (அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.
சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், (அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.
மணக்குடவர் உரை:
என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்பிறழ்ச்சி யுடைய கண்.
பரிமேலழகர் உரை:
(தூது விடக் கருதியாள் சொல்லியது,) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின்துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன்கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன். (‘கயலுண்கண்என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல்காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், ‘சாற்றுவேன்என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், ‘மன்ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments