HomeUncategorizedThirukural 1214 of 1330 - திருக்குறள் 1214 of 1330

Thirukural 1214 of 1330 – திருக்குறள் 1214 of 1330

Thirukural
1214 of 1330 –
திருக்குறள் 1214 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : கனவுநிலையுரைத்தல்.
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
Translation:
Some pleasure I enjoy when him who loves
not me
In waking hours, the vision searches out
and makes me see.
Explanation:
There is pleasure in my dream, because in
it I seek and obtain him who does not visit me in my wakefulness.
கலைஞர் உரை:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

[ads-post]
மு. உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
மணக்குடவர் உரை:
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்குநனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும்இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம்
ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. ‘இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments