குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல்.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
Translation:
As fragrance in the opening bud, some
secret lies
secret lies
Concealed in budding smile of this dear
damsel’s eyes.
damsel’s eyes.
Explanation:
There is something in the unmatured smile
of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
கலைஞர் உரை:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
[ads-post]
மு.வ உரை:
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
மணக்குடவர் உரை:
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் – முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு – முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை – புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.).




