குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அழுக்காறாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அழுக்காறாமை.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
Translation:
Envy
they have within! Enough to seat their fate!
they have within! Enough to seat their fate!
Though
foemen fail, envy can ruin consummate..
foemen fail, envy can ruin consummate..
Explanation:
To
those who cherish envy that is enough. Though free from enemies that (envy)
will bring destruction.
those who cherish envy that is enough. Though free from enemies that (envy)
will bring destruction.
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
[ads-post]
மு.வ உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.
மணக்குடவர் உரை:
அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது – அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் – அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். (‘அதுவே‘ என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.).




