குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அழுக்காறாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அழுக்காறாமை.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
Translation:
To
men of envious heart, when comes increase of joy,
men of envious heart, when comes increase of joy,
Or
loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.
loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.
Explanation:
The
wealth of a man of envious mind and the poverty of the righteous will be
pondered.
wealth of a man of envious mind and the poverty of the righteous will be
pondered.
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
[ads-post]
மு.வ உரை:
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.
மணக்குடவர் உரை:
அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.
பரிமேலழகர் உரை:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் – ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. ‘உளவாயின்‘ என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், ‘இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?’ என்று ஆராயப்படுதலின்‘ ‘நினைக்கப்படும்‘ என்றார். “இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது” (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.).




