HomeUncategorizedThirukural 170 of 1330 - திருக்குறள் 170 of 1330

Thirukural 170 of 1330 – திருக்குறள் 170 of 1330

Thirukural
170 of 1330 –
திருக்குறள் 170 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அழுக்காறாமை.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
Translation:
No
envious men to large and full felicity attain;
No
men from envy free have failed a sure increase to gain.
Explanation:
Never
have the envious become great; never have those who are free from envy been
without greatness.
கலைஞர் உரை:
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

[ads-post]
மு. உரை:
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.
மணக்குடவர் உரை:
அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவிநிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது..
பரிமேலழகர் உரை:
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments