HomeUncategorizedThirukural 179 of 1330 - திருக்குறள் 179 of 1330

Thirukural 179 of 1330 – திருக்குறள் 179 of 1330

Thirukural
179 of 1330 –
திருக்குறள் 179 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
வெஃகாமை.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
Translation:
Good
fortune draws anigh in helpful time of need,
To
him who, schooled in virtue, guards his soul from greed.
Explanation:
Lakshmi,
knowing the manner (in which she may approach) will immediately come to those
wise men who, knowing that it is virtue, covet not the property of others.
கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

[ads-post]
மு. உரை:
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
மணக்குடவர் உரை:
அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே
சேரும்திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments