குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
வெஃகாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
வெஃகாமை.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
Translation:
From
thoughtless lust of other’s goods springs fatal ill,
thoughtless lust of other’s goods springs fatal ill,
Greatness
of soul that covets not shall triumph still.
of soul that covets not shall triumph still.
Explanation:
To
covet (the wealth of another) regardless of consequences will bring
destruction. That greatness (of mind) which covets not will give victory.
covet (the wealth of another) regardless of consequences will bring
destruction. That greatness (of mind) which covets not will give victory.
கலைஞர் உரை:
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
[ads-post]
மு.வ உரை:
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்.
மணக்குடவர் உரை:
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
பரிமேலழகர் உரை:
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் – பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் – அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் ‘இறல்ஈனும்‘ என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், ‘விறல்ஈனும்‘ என்றும் கூறினார். ‘செருக்கு‘ ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன..




