HomeUncategorizedThirukural 226 of 1330 - திருக்குறள் 226 of 1330

Thirukural 226 of 1330 – திருக்குறள் 226 of 1330

Thirukural
226 of 1330 –
திருக்குறள் 226 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
ஈகை.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
Translation:
Let man relieve the wasting hunger men
endure;
For treasure gained thus finds he
treasure-house secure.
Explanation:
The removal of the killing hunger of the
poor is the place for one to lay up his wealth.
கலைஞர் உரை:
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

[ads-post]
மு. உரை:
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
மணக்குடவர் உரை:
பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம். இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.
பரிமேலழகர் உரை:
அற்றார் அழிபசி தீர்த்தல்வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃதுபொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், ‘அழி பசிஎன்றார். ‘அறம் நோக்கிஎன்பது எஞ்சி நின்றது. ‘அற்றார் அழிபசி தீர்த்தபொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments