HomeUncategorizedThirukural 257 of 1330 - திருக்குறள் 257 of 1330

Thirukural 257 of 1330 – திருக்குறள் 257 of 1330

Thirukural
257 of 1330 –
திருக்குறள் 257 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
புலான்மறுத்தல்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
Translation:
With other beings’ ulcerous wounds their
hunger they appease;
If this they felt, desire to eat must
surely cease.
Explanation:
If men should come to know that flesh is
nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.
கலைஞர் உரை:
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

[ads-post]
மு. உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
சாலமன் பாப்பையா உரை:
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
மணக்குடவர் உரை:
உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது. அங்காவாமைபுறப்பட விடாமை.
பரிமேலழகர் உரை:
புலால் பிறிதொன்றன் புண்புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும்அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். (‘அஃதுஎன்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments