HomeUncategorizedThirukural 396 of 1330 - திருக்குறள் 396 of 1330

Thirukural 396 of 1330 – திருக்குறள் 396 of 1330

Thirukural
396 of 1330 –
திருக்குறள் 396 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
Translation:
In
sandy soil, when deep you delve, you reach the springs below;
The
more you learn, the freer streams of wisdom flow.
Explanation:
Water
will flow from a well in the sand in proportion to the depth to which it is
dug, and knowledge will flow from a man in proportion to his learning.
கலைஞர் உரை:
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

[ads-post]

மு. உரை:
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
சாலமன் பாப்பையா உரை:
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
மணக்குடவர் உரை:
அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்:
அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
இஃது அறிவுண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் –
மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும்
, மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் – அதுபோல மக்கட்கு
அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக்
கேணிஎன்றது, அதற்கண் நீரை. அளவிற்றாகஎன்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான்
அமையாது
, மேன்மேல்
கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின்
, மேல் உண்மை அறிவே
மிகும்
‘ (குறள் .373) என்றதனோடு
மலையாமை அறிக.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments