HomeUncategorizedThirukural 395 of 1330 - திருக்குறள் 395 of 1330

Thirukural 395 of 1330 – திருக்குறள் 395 of 1330

Thirukural
395 of 1330 –
திருக்குறள் 395 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
Translation:
With
soul submiss they stand, as paupers front a rich man’s face;
Yet
learned men are first; th’unlearned stand in lowest place.
Explanation:
The
unlearned are inferior to the learned, before whom they stand begging, as the
destitute before the wealthy.
கலைஞர் உரை:
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

[ads-post]

மு. உரை:
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
மணக்குடவர் உரை:
பொருளுடையார் முன்பு
பொருளில்லாதார் நிற்குமாறு போல
, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர்
கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.
பரிமேலழகர் உரை:
உடையார்முன் இல்லார் போல்
ஏக்கற்றும் கற்றார் –
பிற்றை
நிலைமுனியாது கற்றல் நன்று

(
புறநா.183) ஆதலான் , செல்வர்முன்
நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார்
தலையாயினார். கல்லாதவர் கடையரே – அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும்
இழிந்தாரேயாவர். (உடையார்
,
இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப்
பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு
ஞான்றும் அறிவுடைய ராகாமையின்
, ‘கடையரேஎன்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும்
கூறப்பட்டன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments