HomeUncategorizedThirukural 429 of 1330 - திருக்குறள் 429 of 1330

Thirukural 429 of 1330 – திருக்குறள் 429 of 1330

Thirukural
429 of 1330 –
திருக்குறள் 429 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : அறிவுடைமை.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
Translation:
The wise with watchful soul who coming ills
foresee;
From coming evil’s dreaded shock are free.
Explanation:
No terrifying calamity will happen to the
wise, who (foresee) and guard against coming evils.
கலைஞர் உரை:
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

[ads-post]
மு. உரை:
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
மணக்குடவர் உரை:
துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.
பரிமேலழகர் உரை:

எதிரதாக் காக்கும் அறிவினார்க்குவரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லைஅவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை. (‘நோய்என வருகின்றமையின், வாளாஎதிரதாஎன்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல்அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments