HomeUncategorizedThirukural 434 of 1330 - திருக்குறள் 434 of 1330

Thirukural 434 of 1330 – திருக்குறள் 434 of 1330

Thirukural
434 of 1330 –
திருக்குறள் 434 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : குற்றங்கடிதல்.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
Translation:
Freedom from faults is wealth; watch
heedfully
‘Gainst these, for fault is fatal enmity.
Explanation:
Guard against faults as a matter (of great
consequence; for) faults are a deadly enemy.
கலைஞர் உரை:
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

[ads-post]
மு. உரை:
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
மணக்குடவர் உரை:
தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான். இது குற்றங் கடிய வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:

அற்றம் தருஉம் பகை குற்றமேதனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே, குற்றமே பொருளாகக் காக்கஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும். (இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின்இவையே பகையாவனஎன்னும் வடநூலார் மதம் பற்றி, ‘குற்றம் அற்றம் தருஉம் பகைஎன்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், ‘பொருளாகஎன்றும் கூறினார். ‘குற்றமே காக்கஎன்பதுஅரும்பண்பினால் தீமை காக்க,’ என்பதுபோல நின்றது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments