HomeUncategorizedThirukural 432 of 1330 - திருக்குறள் 432 of 1330

Thirukural 432 of 1330 – திருக்குறள் 432 of 1330

Thirukural
432 of 1330 –
திருக்குறள் 432 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : குற்றங்கடிதல்.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
Translation:
A niggard hand, o’erweening self-regard,
and mirth
Unseemly, bring disgrace to men of kingly
brith.

Explanation:
Avarice, undignified pride, and low
pleasures are faults in a king.
கலைஞர் உரை:
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

[ads-post]
மு. உரை:
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வதுஇவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
மணக்குடவர் உரை:
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:

இவறலும்வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும்நன்மையின நீங்கிய மானமும், மாணா உவகையும்அளவிறந்த உவகையும் , இறைக்கு ஏதம்அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்குமாண்பு இறந்த மானம்என்றார். அஃதாவது, ‘அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும் , ‘சினனே காமம் கழிகண்ணோட்டம்என்றிவற்றைஅறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது‘ (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments