HomeUncategorizedThirukural 460 of 1330 - திருக்குறள் 460 of 1330

Thirukural 460 of 1330 – திருக்குறள் 460 of 1330

Thirukural
460 of 1330 –
திருக்குறள் 460 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : சிற்றினஞ்சேராமை.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
Translation:
Than good companionship no surer help we
know;
Than bad companionship nought causes direr
woe.

Explanation:
There is no greater help than the company
of the good; there is no greater source of sorrow than the company of the
wicked.
கலைஞர் உரை:
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

[ads-post]
மு. உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
மணக்குடவர் உரை:
நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லைஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல்தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. (ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. ‘ஊங்குஎன்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத்துணைஎன்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப்பகைஎன்றும் கூறினார். ‘அல்லல் படுப்பதுஎன்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments